தமிழக மின்சாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பவர் செந்தில்பாலாஜி. இவருக்கும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கும் இடைேயே கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் கடும் மோதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 






அவசரகால கதவை திறந்த மாநில தலைவர்:


இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் சிலர் மீது மறைமுகமாக குற்றம் சாட்டியுள்ளார். அதில், கடந்த 10ஆம் தேதி ‘போட்டோஷாப்’ கட்சியின் மாநிலத் தலைவரும், இளைஞரணியின் தேசியத் தலைவரும் விமானத்தில் கிளம்பும் போது பொறுப்பே இல்லாமல் விமானத்தின் ‘எமர்ஜென்சி’ கதவை திறந்து விளையாடியிருக்கிறார்கள்.


விதிமுறைகளின்படி பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கி மீண்டும் சோதனை செய்யப்பட்டு நோகடிக்கப்பட்டிருக்கிறார்கள். விமானம் 3 மணி நேர தாமதம் ஆகியிருக்கிறது. மன்னிப்பு கடிதம் எழுதுவதே பரம்பரை வழக்கம் என்பதால், அன்றும் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். ஊடகங்களில் இந்தச் செய்தி ஏன் வரவில்லை? என, செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.


வழக்கமாக, பாஜகவை போட்டோஷாப் கட்சி என திமுகவினர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் பார்க்கும்போது அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியிருப்பது, பாஜக தமிழக தலைவர் அண்ணாமாலையை தான் என யூகிக்கப்படுகிறது.  


ரபேல் கைக்கடிகார மோதல்:


அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் பா.ஜ.க. தமிழக தலைவர் அண்ணாமலை இடையேயான கருத்து மோதல் தொடர்ந்து வலுத்து வருகிறது. அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ரபேல் விமானம் தயாரித்த நிறுவனம் தயாரித்த கைக்கடிகரத்தை தான் அணிந்து இருக்கிறேன். ரபேல் விமானம்  ஓட்டக் கூடிய பாக்கியம் கிடைக்கவில்லை. அதான் இந்த கைக்கடிகாரத்தை கட்டி இருக்கின்றேன்.  நான் தேசியவாதி. அதனால் ரபேல் கைகடிகரத்தை கட்டி இருக்கின்றேன் என பேசினார்.


அண்ணாமலை - செந்தில் பாலாஜி மோதல்:


அண்ணாமலையின் பேச்சுக்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் பிரான்ஸ் நிறுவனம் சார்பில் உலகளவில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள ரபேல் கைகடிகாரத்தை கட்டியிருக்கிறார். அதற்கான ரசீசை வெளியிட முடியுமா என கேள்வி எழுப்பினார்.


இதையடுத்து அண்ணாமலை - செந்தில் பாலாஜி இடையேயான கருத்து மோதல் விஸ்வரூபம் எடுக்க, அது திமுக - பாஜக இடையேயான மோதலாக மாறியது. ரபேல் கைக்கடிகாரம் தொடர்பான விவகாரம் சமூக வலைதளங்களிலும் பெரும் பேசுபொருளானது. தற்போது, அமைச்சர் செந்தில்பாலாஜியின் ட்விட் வைரலாகி வருகிறது.