மேட்டுத்தெரு அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதிசையை முன்னிட்டு பகல் பத்து ஆறாம் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
கரூர் நகரப் பகுதியில் உள்ள மேட்டுத்தெரு பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதிசையை முன்னிட்டு நாள்தோறும் சுவாமி உற்சவர் திருவீதி உலா நடைபெற்று வருகிறது.
வைகுண்ட ஏகாதேசையை முன்னிட்டு பகல் பத்து நிகழ்ச்சியில் இன்று ஆறாம் நாள் நிகழ்ச்சியாக சுவாமி திருவீதி உலா மேல தாளங்கள் முழங்க ஆலயம் வளம் வந்தது. அதை தொடர்ந்து ஆண்டாள் மாலை மாற்றும் நிகழ்ச்சியும், ஆஞ்சநேயர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்று, அதை தொடர்ந்து மீண்டும் ஆலய மண்டபத்திற்கு அபய பிரதான ரங்கநாதசுவாமி வந்தடைந்தார். அதை தொடர்ந்து அவருக்கு ஆலயத்தின் பட்டாச்சாரியார் தூப தீபங்கள் காட்டி, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை காட்டினார். பின்னர் அனைவருக்கும் துளசி மஞ்சள் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
அபய பிரதான ரங்கநாத சுவாமி ஆலயத்தில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதேசி நிகழ்ச்சியை காண கரூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
மார்கழி மாத சஷ்டியை முன்னிட்டு விசுவர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் முருகப்பெருமானுக்கு சிறப்பு பொருட்கால் அபிஷேகம் மற்றும் ஆராதனை.
கரூர் தேர் வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் மார்கழி மாத சஷ்டியை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன் ,நெய் ,இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் முருகப்பெருமானுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அறிவித்த பிறகு, கையில் வேலுடன் முருக பெருமான் ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார். அதைத்தொடர்ந்து அழகன் முருகனுக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்துடன் மகா தீபாரதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து குடியிருந்த அனைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அபய பிரதான ரங்கநாதர் கோயிலில் ஜனவரி 2 சொர்க்கவாசல் திறப்பு.
கரூர் அபய பிரதான ரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதேசி மற்றும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வரும் ஜனவரி 2 நடக்கிறது. ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் இக்கோவிலில் வைகுண்ட ஏகாதேசி விழா விமர்சியாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதேசி விழா கடந்த 23 இல் தொடங்கியது. பகல் 10 நிகழ்ச்சி வரும் ஜனவரி ஒன்று வரை நடக்கிறது. தொடர்ந்து இரண்டாம் தேதி அதிகாலை 4:30 மணிக்கு மேல் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு 10 மணிக்கு சுவாமி புறப்பாடு மூன்றாம் தேதி வைகுண்ட நாராயணன் அவதார நிகழ்ச்சி நாளில் வெண்ணை தாலி கிருஷ்ணன் நிகழ்ச்சி ஐந்தில் ராம அவதார நிகழ்ச்சி ஆகியவை நடைபெற உள்ளன. மேலும் ஜனவரி 6 முதல் 12 ஆம் தேதி வரை வேணுகோபால் கிருஷ்ணன் வாமன அவதாரம், ராஜ தர்பார், குதிரை வாகன புறப்பாடு, ஆண்டாள் திருக்கோலம், ஆழ்வார் மோஷம் ஊஞ்சல் அவதாரம், போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் நந்தகுமார் உதவி ஆணையர் ஜெயதேவி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.