கரூர் அழிந்து வரும் பறவை இனங்களில் ஒன்றான சிட்டுக்குருவி




 


கரூர் அழிந்து வரும் பறவை இனங்களில் ஒன்றான சிட்டுக்குருவிகளை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கிராமங்களில் பிறந்தவர்களுக்கு நன்கு தெரியும். கிராமமோ நகரமோ தங்களது வீடுகளில் கீச் கீச் என்ற ஒலியுடன் பறந்து வரும் சிட்டு குருவிகளை பார்க்காமல் அவர்களது பொழுதுகள் விடிந்ததும் இல்லை முடிந்ததும் இல்லை என்றே கூறலாம். வீடுகளில் மாட்டி வைக்கப்பட்டு இருக்கும் போட்டோக்களுக்கு பின்னே, மற்றும் சாமி படம், நிலைப்படிகள் என்று கிடைத்த இடத்தை எல்லாம் சிட்டுக்குருவிகள் ஆக்கிரமித்து கூடு கட்டி வாடகை கொடுக்காமல் வாழும் காலம் அது. காலை, மாலை பொழுதுகளில் அதன் கீச்சு கீச்சு ஒலி ஏற்படுத்தும் ஏகாந்தத்தை வெறும் வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது.


எனவே கூறலாம் அவையெல்லாம் வெறும் கனவாகி போய்விட்ட நிலையில் தற்போது நகரப் பகுதிகளில் மட்டுமல்ல கிராமப்புறங்களில் கூட சிட்டுக்குருவிகளில் பார்ப்பது அதிரிலும் அரிதாகவே உள்ளது என கூறலாம். இதற்கெல்லாம் காரணமாகும் மனித இனம் அதிகமாக விவசாயத்தில் நாம் பூச்சி மருந்துகளை பயன்படுத்துவது வயல்வெளிகளை வீட்டுமனை ஆக்குவது என எல்லாம் சேர்ந்து மொத்தமாக சிட்டுக்குருவி இனம் அழிந்து போகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. இவ்வாறு அழிந்து போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சிட்டுக்குருவி போற்றி பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் மார்ச் 20 ஆம் தேதி அன்று சிட்டுக்குருவிகள் தினமாக அறிவித்து கடைபிடித்து வரும் நிலையில்  13 ஆண்டுகள் வாழும் சிட்டுக்குருவிகள் பாதுகாப்பான இடங்கள் ஆகிய வீடுகளில் கூடு கட்டி வசிக்கும் தன்மை கொண்டவை. மரத்தில் கூடு கட்டினால் பெரிய பறவைகளால் முட்டை மற்றும் குஞ்சுகளை சாப்பிட்டு விடும் நிலை உள்ளதால் வீடுகளில் கூடு கட்டி வாழ்கின்றன.


முன்பு கூரை வீடு , ஓட்டு வீடுகளில் அதிகமாக வசித்து வந்த இந்த பறவைகள் கூரைகளின் இரு கட்டைகளுக்கு இடையே கூடு கட்டி வாழ்ந்தன தற்போது கூரை வீடுகள் காணாமல் போகிய நிலையில் கான்கிரீட் வீடுகளிலும் கூடு கட்டி வசித்து வருகின்றன. சிட்டுக்குருவியின் நீளம் 16 சென்டிமீட்டர் ஆகும். இதன் எடை 24. கிராம் முதல் 39.5 கிராம் வரை எடை கொண்டது. இவ்வாறு காணாமல் போன சிட்டுக்குருவிகளை உயிர்ப்பிக்கும் வகையில் சிட்டுக்குருவிகள் எங்களுக்கு பிள்ளைகள் மாதிரி பானைகள் வைத்து எங்கள் வீட்டுக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட சிட்டுக்குருவிகள் வந்து போய் கொண்டுள்ளன. அவற்றின் கீச்சு கீச்சு ஒலி தான் எங்களுக்கு அலாரம் என்று சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் நபராக மாறி இருக்கின்றனர் கரூரைச் சேர்ந்த தம்பதி.


 




கரூர் அருகே, உள்ள செல்லாண்டி பாளையத்தை சேர்ந்தவர்கள் ராஜசேகரன், வனிதா தம்பதி. சிட்டுக்குருவிகளுக்கு அடைக்கலம் தரும் அந்த தம்பதி, பட்டம் பெற்று ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தங்கள் வீட்டு பால்கனியில் சிட்டுக்குருவிகள் தங்குவதற்கு வைக்கப்பட்டிருந்த பானைகளில் குருவிகளுக்கு தேவையான உணவுகளை வைத்து கொண்டிருப்பதை கண்டோம் இதுகுறித்து அந்த தம்பதிகளிடம் இதில் எவ்வாறு ஈடுபாடு உண்டானது என்பது குறித்து அவர்களிடம் விளக்கம் கேட்டோம்.


 அப்போது பள்ளி ஆசிரியரான ராஜசேகரன் கூறுகையில்,


எம்எஸ்சி பிஎட் படித்துள்ளேன். எனது மனைவி பிஎஸ்சி பிஎட் படித்துள்ளார். இருவரும் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறோம். சிட்டுக்குருவி வளர்ப்பதில் எப்படி ஆர்வம் ஏற்பட்டது. பள்ளியில் படிக்கும் மாணவர்களை வைத்து மழை காடுகளை விட்டு வயல்வெளிகளுக்கு வரும் யானைகளை தடுக்க வழி , அதிகமாக பெருகிவிட்ட மைல்களை கட்டுப்படுத்த என்ன வழி என்று பல்வேறு சூழலில் சார்ந்த ஆய்வுகளை செய்ய வைத்தோம். இந்த நிலையில் தான் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு எங்கள் வீட்டு சமையலறையில் உள்ள காற்றை வெளியேற்றும் ஃபேன் உள்ள துவாரத்தில் ஒரு சிட்டுக்குருவி கூடுகட்டி இருந்தது. அதை பார்த்ததும் நானும் எனது மனைவியும் குழந்தையைப் போல் குதூகலமாகி விட்டோம். அதற்கு தண்ணீர் உணவெல்லாம் கொடுத்தோம். அதன் பிறகு சிட்டு குருவிகளை வளர்ப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவைகளுக்கு தேவையான கூடுகள் மற்றும் மண்பானைகளை வைத்து குருவிகளுக்கு அடைக்கலம் கொடுத்தோம்.


தற்போது எத்தனை குருவிகள் உள்ளன


ஆரம்பத்தில் அதிகமாக குருவிகள் வரவில்லை இருப்பினும் மண் பானைகள் மற்றும் கூடுகளை வைத்து வந்ததன் பேரில் நாட்கள் செல்ல செல்ல குருவிகள் வர ஆரம்பித்தனர். இருப்பினும் அதற்கு தேவையான இறைகள் தண்ணீர் உள்ளிட்டவைகளை வைத்து வந்தோம். இந்நிலையில் நாட்கள் செல்ல செல்ல குருவியில் அதிக அளவில் வந்து செல்ல ஆரம்பித்தன தற்போது 400 குருவிகள் வரை வந்து செல்கின்றன. குருவிகளுக்கு தேவையான உணவுகள் குருவிகளுக்கு கம்பு  ,சோளம் அரிசி ஊறிட்ட தீவனங்களை வைத்து வருகிறோம் .மேலும் தண்ணீர் ஊற்றி வைப்பது வழக்கம் வாரம் ஒரு முறை அவற்றை சுத்தம் செய்து வைப்பேன்.




தீவன செலவு எவ்வளவு செலவு ஆகிறது. தீவன செலவாக மாதம் 2000 முதல் 3 ஆயிரம் வரை செலவு ஆகிறது. 
பராமரிப்புக்கு என எவ்வளவு நேரம் ஒதுக்குவீர்கள். குருவிகள் பராமரிப்புக்கு என காலை மற்றும் மாலை வேலைகளில் சிறிது நேரம் ஒதுக்குவது உண்டு இறை வைப்பது மற்றும் தண்ணீர் வைப்பது உள்ளிட்ட வேலைகள் செய்வேன். குருவிகள் வளர்ப்பதால் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லை.  அண்டை வீட்டினர் இதற்கு உறுதுணையாகவே உள்ளனர். 


குருவிகள் வளர்ப்பது சிரமமான செயல் என்று நினைத்தது உண்டா?



அவ்வாறு ஒருபோதும் நினைக்கவில்லை குருவிகளிடம் கீச்சு கீச்சு சத்தம் மனதிற்கு அமைதியை தருகிறது. அதுவே போதுமானதாக உள்ளது. குருவிகளின் வாழ்விற்கு வழி வகுக்க வேண்டும். வருங்கால சந்ததிகள் குருவிகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.


பறவைகள் குறித்து நீங்கள் கூற விரும்புவது,


மனிதர்கள் இல்லாத உலகில் பறவைகளால் வாழ முடியும். ஆனால் பறவைகள் இல்லாத உலகில் மனிதர்களால் வாழ முடியாது என பறவைகள் வல்லுனர் சலீம் அலி குறிப்பிட்டுள்ளார்.


சிட்டுக்குருவியை பாதுகாக்க வேறு என்ன செய்கிறீர்கள்


அழிவின் விளிம்பில் இருக்கும் இந்த பறவை இனத்தை காக்க நம்மால் ஆன முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், பட்டாசுகள் வெடிப்பதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும், நம் வீட்டு பால்கனியில் மரம், மண்பானை, அட்டை பெட்டியாலான செய்யப்பட்ட செயற்கை கூடுகள் அமைத்து அவற்றின் இனப்பெருக்கத்திற்கு உதவ வேண்டும். வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை அச்சடித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வழங்கிய வருகிறேன். குருவிகள் கூடு கட்டினால் தெய்வீக அருள் அதிகரிக்கும் எனக் கூறுவது பற்றி இருக்கலாம் சிலர் குருவிகள் கூடு கட்டினால் நல்ல சகுனம் என்று கூட கூறுவர் எது எப்படியோ குருவிகள் வளர்ப்பது காலையில் எழுந்த பொழுது அவற்றின் கீச் கீச் சத்தம் மனதிற்கு உற்சாகத்தையும் புத்துணர்ச்சியும் ஏற்படுத்துவதாக உள்ளது.