• Omni Bus Strike: பேச்சுவார்த்தையில் உடன்பாடு; பேருந்துகள் ஓடும் - போராட்டத்தை வாபஸ் பெற்ற ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்


ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் பெறுவதாக ஆம்னி பேருந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழ்நாடு போக்குவரத்து அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டிய நிலையில் இந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.  இன்றுடன் விடுமுறை நாள் முடிவுக்கு வருகிறது. இதனால் சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் இன்று சென்னை திரும்ப உள்ளனர். இந்நிலையில் இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. மேலும் படிக்க



  • TN Rain Alert: அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் நிலவும் தீவிர புயல்.. தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. முழு விவரம்..


நேற்று (23-10-2023) காலை மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில்  நிலவிய   ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை 1730 மணி அளவில்  ஹாமூன் புயலாக வலுப்பெற்று, இன்று (24-10-2023) காலை  0230 மணி அளவில் தீவிர புயலாக வடமேற்குவங்கக்கடல்பகுதிகளில் நிலவியது. இது இன்று காலை  0830 மணி அளவில் மேலும் வலுப்பெற்று வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மிக தீவிர புயலாக நிலவுகிறது. இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவிழந்து வங்கதேச கரையை கெபுபரா (Khepupara) மற்றும் சிட்டகாங் (Chittagong) இடையே 25 ஆம் தேதி மாலை கடக்கக்கூடும். மேலும் படிக்க 



  • SriLanka:”இனி ஈசியா போலாம் இலங்கைக்கு” - இலவச விசா அறிவிப்பு - ஆனால் இந்த நாடுகளுக்கு மட்டும்தான்!


இலங்கை நாட்டுக்கு செல்ல இலவச விசா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  இந்தியாவில் இருந்து எந்த வெளிநாட்டுக்கு சென்றாலும் விசா என்பது முக்கியமான தேவையாக உள்ளது. சுற்றுலா, வேலை தொடர்புடைய வகைகளில் விசா எனப்படும் நுழைவுச்சீட்டு வழங்கப்படுகிறது. இது குறிப்பிடத்தகுந்த காலம் அந்நாட்டில் நாம் இருக்க செல்லுபடியாகும். விசா காலாவதியாகும் பட்சத்தில் அதனை நீட்டித்து கொள்ளவும் வசதிகள் உள்ளது. ஆனால் இதனைப் பெற பல்வேறு கட்ட நடைமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். மேலும் படிக்க



  • Latest Gold Silver: அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. எங்கு? எவ்வளவு? இன்றைய தங்கம் வெள்ளி நிலவரம்..


இன்று (அக்டோபர் 24-ஆம் தேதி) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 அதிகரித்து சவரனுக்கு ரூ.45,400 -க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.15 அதிகரித்து கிராமுக்கு ரூ. 5,675 க்கு விற்பனை செய்யப்படுகிறது.  சென்னையில் 24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 49,160 ஆகவும் கிராமுக்கு ரூ.6,145 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் படிக்க



  • தூத்துக்குடி- இலங்கை, தூத்துக்குடி- மாலத்தீவு இடையே விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து


தூத்துக்குடி வஉசி துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு ஏற்கெனவே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. ஆனால் அந்த சேவை சில மாதங்களுக்கு பிறகு நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் சிறிய வகை பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அதன்படி 2 நிறுவனங்கள் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்கு விருப்பம் தெரிவித்திருப்பதாகவும், அந்த நிறுவனத்தினர் இலங்கையில் அனுமதி பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாகவும் துறை முக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். மேலும் படிக்க