ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் பெறுவதாக ஆம்னி பேருந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழ்நாடு போக்குவரத்து அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டிய நிலையில் இந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 


இன்றுடன் விடுமுறை நாள் முடிவுக்கு வருகிறது. இதனால் சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் இன்று சென்னை திரும்ப உள்ளனர். இந்நிலையில் இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.


ஆம்னி பேருந்துகளின் கூடுதல் கட்டணம் வசூளிக்கப்படுவதாக கூறி 102 ஆம்னி பேருந்துகள் சிறை பிடிக்கப்பட்டுள்ளது. அந்த பேருந்துகள் அனைத்தையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் ஆம்னி பேருந்த்களுக்கு கட்டண நிர்ணயம் இல்லாத போதிலும் மக்கள் எந்த விதத்திலும் பாதிக்காத வண்ணம் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருவதாகவும் கூறி இந்த திடீர் அறிவிப்பை வெளியிட்டுனர். அதனை தொடர்ந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. 


இது தொடர்பாக ஏபிபி நாடுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்த அமைச்சர் சிவசங்கர், “


வெளி மாநில பதிவு எண் கொண்ட வாகனங்களை இங்கு இயக்கக் கூடாது என அறிவுரை வழங்கப்பட்டது. அதையும் மீறி சிலர் பேருந்துகளை இயக்கி வருகின்றனர். அதேபோல் விடுமுறை நாட்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் வர இருக்கும் நிலையில் இந்த பிரச்சனை எழ கூடாது என்பதற்காக இப்படி சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. 






 

இதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்ட நிலையில் இந்த போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது என போக்குவரத்து கூட்டமைப்பு சார்பாக அறிவிக்கப்பட்டது. பேச்சுவார்த்தையை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க செயலாளர் மாறன் “தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் திரும்ப வசதியாக ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும். ஆம்னி பேருந்து போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது. மக்கள் பீதியடைய வேண்டாம். 90 சதவீத பேருந்துகள் எங்கள் சங்கத்தில் உள்ளன. எங்கள் சங்கத்தில் 1,500 பேருந்துகள் உள்ளன. அவை அனைத்தும் இயங்கும். வெளிமாநில பதிவு எண் கொண்ட வாகனங்களே சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.