- ‘அமுல் நிறுவனத்தை தடுத்து நிறுத்துங்க’ : அமித்ஷாவுக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..
தமிழ்நாட்டில் ஆவின் பால் கொள்முதலை பாதிக்கும் வகையில் அமுல் நிறுவனம் செயல்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், அமுல் நிறுவனத்தின் இத்தகைய செயல், பால் மற்றும் பால் பொருட்களைக் கொள்முதல் செய்து விற்பனை செய்யும் கூட்டுறவு சங்கங்களிடையே ஆரோக்கியமற்ற போட்டியை உருவாக்கிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க
- நாடாளுமன்றக் கட்டிடம்; செங்கோல் சைவ சமயம் சார்ந்ததல்ல- அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி
புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 ஆதீனங்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி அளித்துள்ளார்.செங்கோல் சைவ சமயம் சார்ந்தது அல்ல. செங்கோல் குறித்த குறிப்புகள் திருக்குறளில் உள்ளன. அடுத்த 100 ஆண்டுகளுக்கு செங்கோல் நாட்டின் சின்னமாக இருக்கும்''. என்று அவர் தெரிவித்தார்.மேலும் படிக்க
- பழனி மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில் நெஞ்சுவலி.. படிகளிலே துடிதுடித்த பக்தர்..! நடந்தது என்ன?
நேற்று இரவு யானை பாதை வழியாகச் சென்ற ஒருவருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சு வழியின் காரணமாக கீழே படுத்து உருளும் போது அப்போது அங்கு வந்த பக்தர்கள் இடும்பன் கோவில் அருகில் உள்ள மருத்துவமனையில் தகவல் தெரிவிப்பட்டு தூக்கி செல்ல ஸ்ட்ரெச்சரை தேடுவதற்கே பல நிமிடங்கள் ஆனதாக அதுவரை பக்தர் கீழே படுத்து உருண்டு வலியால் துடித்த காட்சிகள் தற்போது இணையத்தில் பரவி வைரல் ஆகி வருகிறது.மேலும் படிக்க
- எனக்கு தலைக்கனமா? ... அதை சொல்றவனுக்கு எவ்வளவு இருக்கணும்? ‘ - நேர்காணலில் டென்ஷனான இளையராஜா..!
நான் தூக்கி எறிஞ்சி பேசுறதா நினைக்க வேண்டாம். என்னுடைய இடத்தில் இருந்து தான் நான் பேச முடியும். இதை நீங்கள் தலைக்கணம் என சொன்னாலும் சரி. எல்லாரும் எனக்கு தலைக்கணம் அதிகம் என சொல்கிறார்கள். அப்படி சொல்கிறவர்களுக்கு எவ்வளவு தலைக்கணம் இருக்கும். நான் இசை பாதையில் போய்க்கிட்டு இருக்கும்போது எனக்கு எதைப் பற்றியும் கவலையில்லை என்று இளையராஜா தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
- இனிமே இவங்க பாத்துப்பாங்க..! 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் - தமிழக அரசு உத்தரவு
தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களுக்கான கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.அரியலூர், கோவை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், நாகை, நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், திருப்பத்தூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க