• TN Rain Alert: கன்னியாகுமரியில் நீடிக்கும் கனமழை..3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. இன்றைய மழை நிலவரம் இதோ..


04.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 05.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். மேலும் படிக்க 



  • ’அரசியல் தொடர்பான எந்த நிகழ்ச்சியிலும் நிர்மலா சீதாராமன் பங்கேற்கவில்லை’ - வானதி சீனிவாசன் விளக்கம்


கோவையில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராம,ன் இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். முன்னதாக அவரை வழியனுப்ப வந்த பாஜக மகளிரணி தேசிய தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நேற்று கோவையில் மத்திய நிதி அமைச்சர் பங்கேற்ற கிரெடிட் அவுட்ரீச் விழாவில் ஒரு லட்சம் வங்கி கணக்குகளுக்கு சுமார் 3749 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், கோவையின் வேகமான வளர்ச்சிக்கு இந்த கடனுதவி திட்டம் உறுதுணையாக இருக்கும் எனவும் தெரிவித்தார். மேலும் படிக்க 



தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பினால், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறப்பதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,  2023-2024 கல்வியாண்டுக்குப் பிறகு தொடங்கப்படும் புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 50/100/150 என்ற அளவில் மட்டுமே இருக்க அனுமதி வழங்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் படிக்க 



  • Rajinikanth Murasoli : ”கலைஞரால் கர்நாடகாவுக்கே ஓடிவிடலாம் என நினைத்தேன்” - நடிகர் ரஜினிகாந்த் எழுதிய கடிதம்


மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் சூழலில், அவருடனான நினைவுகளை திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் நடிகர் ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் எழுதியுள்ள அந்த கடிதத்தில், “கருணாநிதியின் வாழ்க்கை ஒரு திறந்த புத்­த­கம். எஸ்.பி. முத்­து­ரா­மன்,  கருணாநிதியைப் பற்றி நிறைய விஷ­யங்­களை எனக்கு சொல்­லி­யி­ருக்­கி­றார். எஸ்.பி.முத்­து­ரா­மனின் தந்தை ராம சுப்­பையா திரா­விட கட்­சி­யின் தீவிர விசு­வா­சி­யாக இருந்­த­வர். அண்ணா, கருணாநிதி மற்­றும் பல தலை­வர்­கள் செட்­டி­நாடு சென்­றால் ராம சுப்பையாவின் வீட்­டில் தான் தங்­கு­வார்­கள். மேலும் படிக்க 



  • சென்னை விமான நிலையத்தில் இணைய பாதிப்பு; தாமதமாக புறப்பட்ட விமானங்கள்


சென்னை உள்நாடு மற்றும் சர்வதேச விமான நிலையங்களில், இன்று அதிகாலை 2 மணியில் இருந்து 6 மணி வரை, (சிஸ்டம் டவுனாக) இணையதளம்  இயங்காததால், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய, உள்நாடு மற்றும் சர்வதேச விமானங்கள் 20  விமானங்கள், ஒரு மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றதால், பயணிகள் கடும் அவதி அடைந்தனர். சென்னை சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையங்களில், புறப்பாடு விமானங்களில் பயணம் செய்ய வரும் பயணிகளுக்கு, போர்டிங் பாஸ்கள், அந்தந்த விமான நிறுவன கவுண்டர்களில், கம்ப்யூட்டர்கள் மூலமாக வழங்குவார்கள். மேலும் படிக்க