- TN Assembly: சுங்கச் சாவடிகள் வேண்டாம் - மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.. சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு..
ஈரோடு - கோபிச்செட்டிபாளையம் புறவழி சாலை அமைப்பதற்கான சாத்தியகூறுகள் தயார் செய்ய 70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முந்தினம் தொடங்கிய கூட்டம் இன்றுடன் நிறைவு பெற்றது. முதல் நாள் காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனி தீர்மானத்தை கொண்டு வந்தார். மேலும் படிக்க
- TN Rain Alert: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் செம்ம மழை இருக்கு.. எந்தெந்த மாவட்டங்களில்? இன்றைய வானிலை நிலவரம்..
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்றும் நாளையும் சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 11.10.2023:தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மேலும் படிக்க
- International Day For Girl Child: ’பெண் குழந்தைகளை கொண்டாட வேண்டும்’.. உலக பெண் குழந்தைகள் தினத்தில் தமிழிசை சௌந்தரராஜன்..!
உலக பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, பெண் குழந்தைகளை கொண்டாட வேண்டும் அதில் நம் சமுதாயம் அக்கறை கொள்ள வேண்டும் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். உலக பெண் குழந்தைகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் அக்டோபர் 11 ஆம் தேதி அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பெண் குழந்தைகள் மீதான குற்றங்களை தடுப்பது, அவர்களது கல்வி மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவது, சாதனைகளை அங்கீகரிப்பது ஆகியவற்றை வலியுறுத்தி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. மேலும் படிக்க
- Minister Udhayanidhi Stalin: ’நான் முதல்வன்’ மூலம் இளைஞர்களுக்கு வேலை வழங்கிய நிறுவனங்கள்: அமைச்சர் உதயநிதி பாராட்டு
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் ‘நான் முதல்வன் திட்டம்’ மற்றும் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை ஆகியவற்றை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் செல்லும் விதமாக, முன்னணி தொழில் நிறுவனங்களுடன் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை – சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை எம்.ஆர்.சி நகரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துரையாடினர். மேலும் படிக்க
- Annamalai: “எவ்வித உள்நோக்கத்துடன் ரெய்டு நடக்கவில்லை” - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை!
பாஜக மாநில மையக் குழு கூட்டத்திற்கு பிறகு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “நாடாளுமன்ற தேர்தலுக்கு நாட்கள் இருக்கின்றன. இன்னும் நிறைய வேலைகள் இருக்கின்றன. ரெய்டு உள்நோக்கத்துடன் நடக்கவில்லை. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ரெய்டால் மக்கள் பணம் வெளிவருகிறது. தமிழ்நாட்டில் 9 தொகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்படும். திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் தமிழகம் போராட்ட களமாகியுள்ளது.” என்று கூறினார். மேலும் படிக்க