தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்றும் நாளையும் சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
11.10.2023:தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
12.10.2023:தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
13.10.2023 முதல் 17.10.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
களியல் (கன்னியாகுமரி), பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), காட்பாடி (வேலூர்), திற்பரப்பு (கன்னியாகுமரி) தலா 7, RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்) 6, பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), மணியாச்சி (தூத்துக்குடி) தலா 5, புத்தன் அணை (கன்னியாகுமரி), வேலூர், பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), போளூர் (திருவண்ணாமலை), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), சிற்றாறு (கன்னியாகுமரி), பரமத்திவேலூர் (நாமக்கல்), ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), கள்ளக்குறிச்சி, RSCL-3 செம்மேடு (விழுப்புரம்) தலா 4, கேத்தி (நீலகிரி), மண்டலம் 11 U32 மதுரவாயல் (சென்னை), சின்கோனா (கோயம்புத்தூர்), KCS மில்-2 முரார்பாளையம் (கள்ளக்குறிச்சி), வட்டமலை நீர்த்தேக்கம் (திருப்பூர்), ஓசூர் (கிருஷ்ணகிரி), கொடுமுடி (ஈரோடு), திருப்பூர் PWD, நல்லதங்கால் நீர்த்தேக்கம் (திருப்பூர்), க.பரமத்தி (கரூர்), தாளவாடி (ஈரோடு), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) தலா 3, கரம்பக்குடி (புதுக்கோட்டை), சிவலோகம் (கன்னியாகுமரி), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), பெனுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி), ஆலங்குடி (புதுக்கோட்டை), வம்பன் KVK AWS (புதுக்கோட்டை), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), DSCL தியாகதுர்க்கம் (கள்ளக்குறிச்சி), பர்லியார் (நீலகிரி), மங்களபுரம் (நாமக்கல்), மூலனூர் (திருப்பூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), அவினாசி (திருப்பூர்), பொன்னை அணை (வேலூர்), கிளன்மார்கன் (நீலகிரி), எச்சன்விடுதி (தஞ்சாவூர்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), திருப்பூர் வடக்கு, வால்பாறை PTO (கோயம்புத்தூர்) தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும், மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.