ஸ்ரீரங்கம் கோயிலில் ரத்தம் சிந்திய பக்தர்! உடனடியாக சாத்தப்பட்ட நடை!
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழா இன்று திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி ஜனவரி 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் திறப்பு வருகிற 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்து 2.50 லட்சம் பக்தர்கள் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக 2,500 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாசிக்க..
மிக்ஜாம் பேரிடரில் சிறப்பாக செயல்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை
மிக்ஜாம் புயல் பேரிடரில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் , ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். 3429 தூய்மை பணியாளர்களுக்கு தலா 4000 ரூபாய் ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. இதற்காக ரூ. 1,37,16,000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய வட கடலோர தமிழகத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. முன் எப்போதும் இல்லாத வகையில் 40 செ.மீ மழை பதிவானது. மேலும் வாசிக்க..
சாதிவாரி கணக்கெடுப்பு என்பது மத்திய அரசுதான் செய்ய வேண்டும் - கே.எஸ்.அழகிரி
எண்ணூர் எண்ணெய் கசிவுக்கு சிபிசிஎல் நிறுவனம்தான் காரணம் - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்
கடந்த வாரம் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உட்பட புறநகர் பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. இதற்கான நிவாரணப் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் சொசஸ்தலை ஆற்றில் எண்ணெய் கழிவு மிதந்து வருகிறது. அப்பகுதியில் இருக்கும் மீன்வர்களின் படகுகளில் கரிய பிசின் போல் இந்த எண்ணெய் ஒட்டியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் வாசிக்க..
இரண்டாவது தலைநகரமாக திருச்சியை அமைக்க வேண்டும் -நயினார் நாகேந்திரன்
மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 141 வது பிறந்த தின விழாவையொட்டி நெல்லை சந்திப்பு பகுதியில அமைந்துள்ள பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் பாரதியார் சிலைக்கு மரியாதை செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “இயற்கை சீற்றத்தை அரசியல் ஆக்க கூடாது என அமைச்சர்கள் கூறியுள்ளனர். எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. மழை பாதிப்பை அரசு கவன குறைவாக கையாண்டுள்ளனர். தமிழக அரசு ரூ.6000 கொடுப்பதாக கூறியுள்ளது. அது போதாது ரூ.12000 கொடுக்க வேண்டும். தேர்தல் கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் இதுவரை நடைபெறவில்லை. டெல்லியில் இருக்கக்கூடிய பாராளுமன்ற குழு பேசி முடிவு எடுப்பார்கள். மேலும் வாசிக்க..
இன்று 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வரும் 18 ஆம் தேதி வரை ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மேலும் வாசிக்க..