• TN Rain Alert: 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.. குளுகுளு அப்டேட் இதோ..


நேற்று (08-11-2023), மத்தியக் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி  இன்று (09-11-2023) அதே பகுதியில்  நிலவுகிறது. மேலும்,  குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க




  • Kanda Sashti Viratham: முருகனை வணங்கினால் தீராத நோய்கள் தீரும்... சஷ்டி விரத காலம்.. கந்தசஷ்டி விரதமும், பலனும்!




கந்த சஷ்டி விரதமிருந்து இவ்வாறு முருகனை வழிபட்டால் வீட்டின் கஷ்டங்கள் நீங்கி இன்பம் செழிக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்று காலம் காலமாக பக்தர்கள் நம்பிக்கையுடன் கந்த சஷ்டி விரதம்  இருக்கின்றனர். சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், முருகனுக்கு உகந்த சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும். மேலும் படிக்க



  • Magalir Urimai Thogai Scheme: 2ஆம் கட்ட மகளிர் உரிமைத் தொகை: நாளை தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்..ரெடியா இருங்க பெண்களே!


முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தலுக்கு முன்பு தேர்தல் வாக்குறுதியாக குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்ற திமுக, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி திட்டத்திற்குத் தகுதியான பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் வகையில் விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டது. மேலும் படிக்க



  • Annamalai Pressmeet: பெரியாரை எந்த இடத்திலும் நாங்கள் அவமானப்படுத்தவில்லை: அண்ணாமலை


பெரியார் சிலை வழிபாட்டுத் தலங்களுக்கு முன் இல்லாமல், பொது இடங்களில் வைக்க வேண்டும் என அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில், “ 'என் மண் என் மக்கள் ' யாத்திரை 103 தொகுதியை கடந்துள்ளது, 15 ம் தேதி முதல் மீண்டும் யாத்திரை தொடங்கும். யாத்திரை மூலம் பெரிய அனுபவம் கிடைத்துள்ளது , கட்சி சாராத பலர் இந்த யாத்திரையில் பங்கேற்கின்றனர்.  ஜனவரி இறுதிக்குள் யாத்திரையை முடிக்க திட்டமிட்டுள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார். மேலும் படிக்க



  • Diwali Bonus: போனஸ் மழையா கொட்டுதே! டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% சதவீதம்...தமிழக அரசு செம அறிவிப்பு!


தீபாவளி மற்றும் பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக கூட்டுறவு சங்க பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று கூட, தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிபக்‌ கழக பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ்‌ வழங்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டது. மேலும் படிக்க