தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மதுரையில் தீபாவளி விற்பனை களை கட்டியுள்ளது. மதுரை முக்கிய கடை வீதிகளான விளக்குத்தூண், தெற்குமாசி வீதி, கீழமாசி வீதி, பத்துத்தூண், மஞ்சனக்காரத்தெரு, கீழவெளி வீதி, காமராஜர் சாலை, உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளி பண்டிகைக்கான புத்தாடைகள், வீட்டு உபயோக பொருட்களை வாங்க காலை முதல் ஆர்வமுடன் வருகை தர தொடங்கியுள்ளனர். இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடோனில் வைக்கப்பட்ட 15 லட்சம் மதிப்பிலான 12500 இலவச வேஷ்டிகள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில் இலவச வேஷ்டிகள் திருடிய வழக்கில் அரசு அலுவலர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு - 4பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வடக்கு தாலுகாவிற்கு சொந்தமான குடோனில் பொங்கல் பண்டிகைக்கு தேவையான இலவச வேஷ்டிகள் 125 பண்டல்களில் மூட்டைக்கு 100 வேஷ்டிகள் என 12500 வேஷ்டிகள் கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கூடுதலாக வேஷ்டிகள் வந்த நிலையில் அதனை வைப்பதற்காக குடோனை அதிகாரிகள் திறக்க முயன்றுள்ளனர். அப்போது பூட்டு திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பூட்டை சோதனை இட்டபோது ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பூட்டு உடைக்கப்பட்டு புதிய போட்டு போடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து வருவாய் துறை அதிகாரிகள் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 15 லட்சம் மதிப்பிலான 12500 வேஷ்டிகள் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் வருவாய் துறை அதிகாரிகள் தகவல் அளித்தனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் தரப்பில் மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாநகர வடக்கு துணை ஆணையர் தல்லாகுளம் காவல்நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு வேஷ்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 12500 வேஷ்டிகள் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்து சரக்கு வாகனங்கள் மூலமாக எடுத்துச் சென்றிருக்கலாம் என்ற அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கேமராக்கள் மூலமாக விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடக்கு வட்டாச்சியர் அலுவலக குடோனில் வைக்கப்பட்ட 12500 பண்டல்கள் அடங்கிய 125 பண்டல்கள் திருடப்பட்ட வழக்கில் நில அளவை துறை கள உதவியாளர் சரவணன், நெல்பேட்டையை சேர்ந்த சுல்தான் அலாவுதீன் (32), சாகுல் ஹமீது, இப்ராகிம் ஷா(47) , 5. செல்லுாரை சேர்ந்த குமரன் (46) , மதிச்சியத்தை சேர்ந்த மணிகண்டன் (36) ஆகிய 6 பேர் மீது தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு - திருடப்பட்ட வேஷ்டிகளை வாங்கிய 4 பேர் கைது - சரவணன் மற்றும் ஷாகுல் ஹமீது ஆகிய இருவர் தலைமறைவான தல்லாகுளம் காவல்துறையினர் தேடிவருகின்றனர். திருடப்பட்ட 12500 வேஷ்டிகள் மீட்கப்பட்டது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivagangai: திருப்பாச்சேத்தியில் வாமனச் சின்னம் பொறித்த நிலதானக்கல் கண்டுபிடிப்பு ; தொல்நடை குழுவிற்கு பாராட்டு
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Crime: பழிக்குப்பழி.. பெங்களூரில் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட தி.மு.க. முன்னாள் மண்டலத் தலைவர்.. பகீர் சி.சி.டி.வி.காட்சி..!