- TN Rain Alert: இன்று 7 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை.. அடுத்த சில நாட்களுக்கு இப்படி தான் இருக்கும்..
தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆயுவு மையம் தென் மண்டல இயக்குனர் பாலசந்திரன், “தமிழக கடலோரப் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்க சுழற்சி நிலவுகிறது மேலும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் மற்றும் ஒரு வளிமண்டல கீழ் அடுக்க சுழற்சி நிலவுகிறது. மேலும் படிக்க
- GIM: சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு - தொடங்கியது இரண்டாம் நாள் அமர்வு
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 3ஆவது முறையாக உலக முதலீட்டாளர் மாநாடு நேற்று (டிச.7) காலை தொடங்கியது. விழாவில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். மத்திய தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசினார். மேலும் படிக்க
- திட்டமிட்டபடி ஸ்ட்ரைக்; போக்குவரத்து தொழிற்சங்கம் கறார்; நெருக்கடியில் தமிழ்நாடு அரசு
ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கம் ஏற்கனவே வேலை நிறுத்தத்தினை அறிவித்திருந்தது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுடன் இன்று இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், நாளை முதல் அதாவது ஜனவரி 9ஆம் தேதிமுதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். மேலும் படிக்க
- Latest Gold Silver Rate: அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.160 குறைவு.. இன்றைய விலை நிலவரம்..
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.46,640 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,830 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,400 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,300 ஆகவும் விற்பனையாகிறது. மேலும் படிக்க
- தாமதமாக அறிவிக்கப்படும் பள்ளி விடுமுறை? வீணாகிறதா காலை உணவு? மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டியது என்ன?
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் சென்னை புறநகர் மாவட்டமாக இருக்கக்கூடிய செங்கல்பட்டு மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை திருப்போரூர், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு, மதுராந்தகம் செய்யூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. மகாபலிபுரம் பகுதியில் மிக கனமழையும் பதிவாகி இருந்தது. மேலும் படிக்க