• Vijayakanth Death: விஜயகாந்த் மறைவு: அஞ்சலி செலுத்த குவியும் மக்கள்.. கோயம்பேட்டில் போக்குவரத்து மாற்றம்..


சென்னை கோயம்பேட்டில் இருக்கும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்த் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள், ரசிகர்கள், மக்கள் திரண்டுள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு மக்கள் ஒத்துழைக்குமாறு சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் படிக்க



  • Vijayakanth Death: “என்னுடைய நெருங்கிய நண்பர் விஜயகாந்த்.. அவர் இடத்தை நிரப்புவது கடினம்” - பிரதமர் மோடி இரங்கல்


தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில், “திரு விஜயகாந்த் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தமிழ் திரையுலகின் ஜாம்பவான், அவரது நடிப்பு மில்லியன் கணக்கானவர்களின் இதயங்களைக் கவர்ந்தது. ஒரு அரசியல் தலைவராக, தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய அவர், பொது சேவையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். மேலும் படிக்க



  • Vijayakanth Death: ’மறைந்தாலும் மக்கள் மனதில் மறையாமல் இருப்பார் விஜயகாந்த்’ - ராகுல் காந்தி இரங்கல்..


இது தொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பதிவில், “தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். சினிமா மற்றும் அரசியலுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் அழியாத தடம் பதித்துள்ளது. இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். மேலும் படிக்க



  • TN Rain Alert: டிச.31 மற்றும் ஜன. 1 ஆம் தேதி கொட்டப்போகும் கனமழை.. 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..


கிழக்கு   திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம்  ஆகிய 4 மாவட்டங்களில் 31 மற்றும் ஜனவரி 1 ஆம் தேதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அதன்படி இன்றும் நாளையும், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில்  ஒருசில இடங்களிலும், உள்  மாவட்டங்களில்  ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க



  • Vijayakanth Death: 'சிறந்த மனிதநேயர் - துணிச்சலுக்கு சொந்தக்காரர்' - கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்..


தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே கடந்த நவம்பர் 18 ஆம் தேதி லேசான காய்ச்சல், சளி மற்றும் இருமல் காரணமாக விஜயகாந்த் சென்னை போரூரில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிட்டதட்ட 23 நாட்கள் சிகிச்சைக்குப் பின் அவர் கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மேலும் படிக்க