• TN Rain Alert: வலுவடைந்த வடகிழக்கு பருவமழை.. 4 நாட்களுக்கு இன்னும் மழை இருக்கு!


 கேரளா கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி  நிலவுகிறது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் 26-ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 27-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் நிலவக்கூடும். இதன் காரணமாக இன்று 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க



  • Fathima Beevi: தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி காலமானார்..



தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி (96) உடல்நலக்குறைவால் காலமானார். இந்தியாவின் முதல் பெண் நீதிபதியாக பணியாற்றியவர் பாத்திமா பீவி. உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இஸ்லாமிய பெண்மணி என்ற பெருமை இவருக்கே சேரும். மேலும் படிக்க



  • இனி ஓ.எம்.ஆர். சாலையில் ஈசியா போலாம்; சென்னையின் முதல் ’U’ வடிவ மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்..!


சென்னை உள்ள ஓ.எம்.ஆர் சாலையில் ரூபாய் 108.13 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ’U’ வடிவ மேம்பாலத்தை வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். இந்த ’U’ வடிவ மேம்பாலம் சென்னையில் கட்டப்பட்டுள்ள முதல் ’U’ வடிவ மேம்பாலம் ஆகும். இதன் மூலம் ஓ.எம்.ஆர் செல்லும் ராஜீவ்காந்தி சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. மேலும் படிக்க



  • Latest Gold Silver Rate: விண்ணை முட்டும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.80 அதிகரிப்பு.. இன்றைய நிலவரம் இதோ..


சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 அதிகரித்து ரூ.45,920 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 10 அதிகரித்து ரூ.5,740 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.49,680 ஆகவும் கிராம் ஒன்று ரூ.6,210 ஆகவும் விற்பனையாகிறது. மேலும் படிக்க



  • IRCTC Website Down: முடங்கிய ஐ.ஆர்.டி.சி.டி இணையதளம்; சீரமைப்பு பணிகள் தீவிரம் - பயணிகள் அவதி


இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து துறை என்றால் அது ரயில்வேதான். ஒரு நாளைக்கு கோடிக்கான மக்கள் இந்தியன் ரயில்வே இயக்கும் ரயில்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியன் ரயில்வேயின் அதிகாரப்பூர்வ பயணச் சீட்டு முன்பதிவு இணையதளம் முடங்கியுள்ளது. இது தொடர்பான தகவலை இந்தியன் ரயில்வேயின் அதிராகரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்வீட்டாக போட்டுள்ளனர். அதில், ‘தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இணையதளம் முடங்கியுள்ளது. மேலும் படிக்க