இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து துறை என்றால் அது ரயில்வேதான். ஒரு நாளைக்கு கோடிக்கான மக்கள் இந்தியன் ரயில்வே இயக்கும் ரயில்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியன் ரயில்வேயின் அதிகாரப்பூர்வ பயணச் சீட்டு முன்பதிவு இணையதளம் முடங்கியுள்ளது.






இது தொடர்பான தகவலை இந்தியன் ரயில்வேயின் அதிராகரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்வீட்டாக போட்டுள்ளனர். அதில், ‘தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இணையதளம் முடங்கியுள்ளது.  இதனால் இணையதளத்தில் முன்பதிவு செய்யும் சேவை தடைபட்டுள்ளது. தொழில்நுட்ப அணி சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் சீரமைப்பு பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது’ என குறிப்பிட்டுள்ளனர். இதனால் பயணிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.