தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 18-ஆம் தேதி நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் பின்னர் பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெற்றது. அதன்பின்னர் ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் துறை ரீதியிலான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. 


இந்நிலையில் இன்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலன் துறை அமைச்சர் சி.வி.கணசேன் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். 


அதன்படி தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற பெண் ஓட்டுநர்கள்  சொந்தமாக ஆட்டோ ரிக்சா வாகனம் வாங்குவதை ஊக்குவிக்க உள்ளது. அதற்காக  500 பெண் ஓட்டுநர்களுக்கு புதியதாக ஆட்டோ ரிக்ஷா வாகனம் வாங்கும் செலவினத்தில் தலா 1 இலட்சம் ரூபாய் மானியமாக தமிழ்நாடு அரசு வழங்கும். 






மேலும் வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கும் இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற உதவும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் நிதி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி இனிமேல் நடைபெறும் வேலை வாய்ப்பு முகாம்களுக்கு ஒரு கோடிக்கு பதிலாக 2 கோடி ரூபாய் வழங்கப்படும்.


மேலும் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்க கடலூர் மாவட்டம் மங்களூர், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி, தருமபுரி மாவட்டம் அரூர், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, பெரம்பலூர் மாவட்டம் குன்னம், கோயம்புத்தூர் மாவட்டம் - வால்பாறை ஆகிய 11 இடங்களில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும். இதற்காக அரசு சார்பில் 97.55 கோடி ரூபாய் செலவு செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண