கடந்த மாதம் 18-ஆம் தேதி கூடிய தமிழக சட்டப்பேரவை நிகழ்வின்போது, 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தொடர்ந்து 19-ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தொடர்ந்து 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை பட்ஜெட் மீது விவாதம் நடைபெற்று பேரவை கூட்டம் முடிவடைந்தது. இந்நிலையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் கடந்த 6-ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. 


தமிழ்நாடு சட்டப்பேரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானியக்கோரிக்கை மீது இன்று விவாதம் நடைபெறுகிறது. இந்தத் துறைகளுக்கான அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலளித்து புதிய அறிவிப்பை வெளியிட்டார். 


அதில், தற்போது தமிழ்நாட்டில் மேலும் 50, 000 விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தியினை பெருக்கவும், விளை நிலங்களின் பரப்பை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறப்பு முன்னுரிமையில் உள்ள விவசாய விண்ணப்பத்தாரர்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என தகவல் தெரிவித்துள்ளார். 






தொடர்ந்து, 1,649 கோடியில் 100 புதிய துணை மின் நிலையங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள், சாலையோர துணைமின் நிலையங்களில் நிறுவப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண