தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் சுப்பையன் தலைமையில் தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, ஓஎன்ஜிசி நிறுவனம் காவிரி டெல்டாவில் 36க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்கனவே கிணறுகள் அமைக்கப்பட்டு பணிகள் முடிவடைந்தப்பின் மூடப்பட்டுள்ளது. அக்கிணறுகளின் அருகே மீண்டும் புதிய கிணறுகள் அமைப்பதற்கு அனுமதி கேட்டு முயற்சித்து வருவதை வன்மையாக கண்டிக்கிறோம் தொழிற்சங்கங்கள் என்கிற பெயரில் பேரழிவு திட்டங்களை சுயநலத்திற்காக காவிரி டெல்டாவில் மீண்டும் செயல்படுத்த வேண்டும் என அரசியல் கட்சித்  அழைத்து வலியுறுத்துவது விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும். ஒருசில குடும்பங்களுக்காக ஒட்டுமொத்த காவிரி டெல்டாவை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்வதற்கு அரசியல் கட்சிகள் துணை போகக்கூடாது.




ஏற்கனவே காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்ததோடு, மட்டுமன்றி 2016 முதல் புதிய கிணறுகள் அமைப்பதற்கு அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தடை விதித்துள்ளார். இந்த நிலையில் புதிய கிணறுகளை அமைப்பதற்கு ஓஎன்ஜிசி நிர்வாகம் மேற்கொள்ளும் மறைமுக சூழ்ச்சிகளை முறியடிக்க அரசியல் கட்சிகள், விவசாயிகள் ஒன்றிணைந்து போராட்டக் களத்திற்கு முன்வர வேண்டும் முன்னால் முதலமைச்ச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு காவிரி டெல்டாவை  பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அரசாணைகள் வெளியிடப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளது. அதனை தற்போது பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு உறுதியோடும், துணிவோடும் நடைமுறைப்படுத்திக் காட்ட  முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறோம். 




வேதாந்தா நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு தமிழகத்தில் காவிரி டெல்டா உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் அனுமதி கேட்டு மீண்டும் விண்ணப்பித்துள்ளதாக தெரியவருகிறது. தமிழகத்தில் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்த பிறகு அதனை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் காவிரி டெல்டா பாசனப் பகுதிகள் மட்டுமின்றி தமிழக அரசின் அனுமதி இல்லாமல் எந்த ஒரு இடத்திலும் புதிய கிணறுகள் அமைப்பதற்கு விண்ணப்பம் செய்வதற்கு அனுமதி வழங்கக்கூடாது. மாநில அரசின் அனுமதியின்றி விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் மத்திய அரசு நிராகரித்திட முன்வர வேண்டும். மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு சட்டம் குறித்து எங்கள் கோரிக்கையை ஏற்று சட்டமன்றத்தில் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் உரிய விளக்கம் அளித்துள்ளதை வரவேற்கிறோம். அதேநேரத்தில் தமிழகத்தில் விவசாயிகள், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி இச்சட்டம் குறித்து விரிவான விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும். அதன் அடிப்படையில் தமிழக அரசு தமிழகத்தின் சாதக பாதகங்களை கருத்தில்கொண்டு அணைகள் பாதுகாப்பு சட்டம் தமிழக நலனுக்கெதிராக உள்ளதாக தெரியவரும் நிலை நம் அணைகளின் பாசன உரிமைகளை பாதுகாத்திடும் வகையில் கொள்கை முடிவை எடுப்பதற்கு முதலமைச்சர் முன்வந்து  தமிழக விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என பி. ஆர். பாண்டியன் தெரிவித்தார்.