TN Weather Update: இன்று 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. 5 நாட்களுக்கு கொட்டப்போகும் கோடை மழை..


தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழகத்தில் அநேக  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


West Nile Fever: வெஸ்ட் நைல் காய்ச்சல்: அறிகுறிகள் இருந்தால் உடனடி பரிசோதனை.. பொது சுகாதார துறை உத்தரவு..


இது தொடர்பான அறிக்கையில், “வெஸ்ட் நைல் வைரஸ் என்பது க்யூலக்ஸ் வகை கொசுக்களால் பரவும் நோயாகும். இந்த வைரஸ் பறவைகளிடமிருந்து கொசுக்களுக்கும், பிறகு கொசுக்கள் மூலம் மனிதர்களுக்கும் பரவுகிறது. ஆனால் இது ஒரு மனிதரிடமிருந்து மற்ற மனிதர்களுக்கு நேரிடையாக பரவுவதில்லை இந்த வைரஸ் உகண்டா நாட்டில் வெஸ்ட் நைல் மாவட்டத்தில் 1937-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் படிக்க


தேனி வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரை திருத்தேரோட்டம்


தென் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற தேனி வீரபாண்டி அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடி ஏற்றம் என்ற கம்பம் நடும் விழா சென்ற மாதம் 17ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு உகந்த வேப்ப இலை மற்றும் மஞ்சள் கலந்த புனித நீரை கொடிகம்பத்தில் ஊற்றி கெளமாரி அம்மனை  வழிபட்டனர். மேலும் படிக்க..


Akshaya Tritiya 2024: அட்சய திருதியை: ரூ.14,000 கோடிக்கு தங்கம் விற்பனை..!


நேற்று அட்சய திருதியை நாளை முன்னிட்டு சுமார் ரூ.14,000 கோடிக்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த விற்பனையில் நகைகள் 80 சதவீதமும், நாணயங்கள் 20 சதவீதமும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நேற்று காலை 6 மணி முதல் நகை கடைகள் திறக்கப்பட்ட நிலையில் ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் நகை வாங்கிச் சென்றனர். மேலும் படிக்க..


சவுக்கு சங்கர் வழக்கு விவகாரம்: ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் டெல்லியில் கைது!


ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலின் எடிட்டர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் சேர்மனிடம் மனு கொடுக்க சென்றிருந்த ஃபெலிக்ஸ் ஜெரால்டை இரவு 11.30 மணி அளவில் தமிழ்நாடு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை காவல்துறையினர் அவருக்கு சம்மன் வழங்கியிருந்த நிலையில் திருச்சிக்கு அழைத்து வருவதாக காவல்துறையினர் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க...