கரூர் பரணி பார்க் பள்ளி மாணவர்கள் வெளியான 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 20 மாணவர்கள் 480க்கு மேல் பெற்று அபார சாதனை புரிந்துள்ளனர்.  450  மதிப்பெண்களுக்கு மேல் 73 மாணவர்களும் பெற்றுள்ளனர்.


 




வெளியான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் M.S.சாதனா – 493 / 500 மதிப்பெண்ணும், R.சாதனா – 491 / 500 மதிப்பெண்ணும், S.T.நேஹா - 490 / 500 மதிப்பெண்ணும் பெற்று அபார சாதனை புரிந்துள்ளனர். மேலும் கணிதத்தில் 12 மாணவர்களும், அறிவியலில் 2 மாணவர்களும்,  சமூக அறிவியலில் 1 மாணவரும் மொத்தம் 15 மாணவர்கள் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 490 மதிப்பெண்களுக்கு மேல் 3  மாணவர்களும், 480 மதிப்பெண்களுக்கு மேல் 23 மாணவர்களும், 470  மதிப்பெண்களுக்கு மேல் 41 மாணவர்களும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 73 மாணவர்களும், 400  மதிப்பெண்களுக்கு மேல் 138 மாணவர்களும் பெற்றுள்ளனர். அண்மையில் வெளியான 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் பரணி பார்க் ஹரிணி சரோஜா கணேசன்-  596 மதிப்பெண்கள் பெற்று கரூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். மேலும் 590 க்கு மேல் 3 மாணவர்களும், 580 மதிப்பெண்களுக்கு மேல் 15 மாணவர்களும், 570  மதிப்பெண்களுக்கு மேல் 23  மாணவர்களும், 550 மதிப்பெண்களுக்கு மேல் 56  மாணவர்களும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 162  மாணவர்களும் பெற்றுள்ளனர்.


 




 


ஜே.இ.இ மெயின் தேர்வில் பரணி மாணவர் ஹரிஸ்குமார் 99.9 பெர்சண்டைல் பெற்று தேசிய அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளார். 14.5 இலட்சம் மாணவர்கள் பங்கு பெற்ற ஜே.இ.இ. மெயின் தேர்வில் பரணி மாணவர்கள் 36 பேர் தேர்வு பெற்று இந்திய அரசால் நடத்தப்படும்  தலைசிறந்த என்.ஐ.டி(NIT) கல்லூரிகளில் சேர தகுதி பெற்றுள்ளனர். பரணி பார்க் பள்ளியில் பொதுத்தேர்விற்கான பயிற்சியோடு சேர்த்து ஆந்திர ஆசிரியர்களைக் கொண்டு 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நீட், ஜே.இ.இ சிறப்புப் பயிற்சியும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அபார சாதனை படைத்துள்ள மாணவர்களுக்கும் அவர்களின் சாதனைக்கு உறுதுணையாக இருந்த பரணிபார்க் கல்விக்குழுமத்தின் முதன்மை முதல்வர் முனைவர் C.ராமசுப்ரமணியன், பள்ளியின் முதல்வர் K.சேகர், துணை முதல்வர் G.நவீன்குமார், மேல்நிலை ஒருங்கிணைப்பாளர் V.பானுப்பிரியா மற்றும் இருபால் ஆசிரியர்களுக்கும் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பரணிபார்க் கல்விக்குழுமத்தின் தாளாளர் S.மோகனரெங்கன் தலைமை தாங்கினார். செயலர் பத்மாவதி மோகனரெங்கன், அறங்காவலர் சுபாஷினி அசோக்சங்கர் முன்னிலை வகித்தனர்.   இவ்விழாவில் சாதனை புரிந்த மாணவர்களும் ஆசிரியர்களும் பொன்னாடையும் பரிசும் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.


சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வெண்ணைமலை, கரூர்


 




 


2023 - 2024 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் நம் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சிறந்த முறையில் மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். மாணவன் G.சர்வஜித் 500க்கு 494 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார். மாணவி R.உபாஸ்ரீ 500க்கு 493 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவி G.ஷோபிகா 500க்கு 492 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கணிதத்தில் எட்டு மாணவர்களும், அறிவியல் பாடத்தில் இரண்டு மாணவர்களும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பள்ளி அளவில் 10 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரையும் பள்ளி தாளாளர், முதல்வர் மற்றும் இருபால் ஆசிரியப் பெருமக்கள் பாராட்டினர்.