TN Weather Update: 24 மணிநேரத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை.. ஜூன் 1, 2 தேதிகளில் 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..


வரும் ஜூன் 1 ஆம் தேதி மற்றும் 2 ஆம் தேதி தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தென்தமிழக  பகுதிகளின்  மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் துவங்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்றும் நாளையும்,  தமிழகத்தில்  ஓரிரு    இடங்களிலும்,    புதுவை     மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


”முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறேன், மீண்டு வருவேன்”.. வைகோ தனது உடல்நிலை குறித்து வீடியோ வெளியீடு!


கடந்த சனிக்கிழமை திருநெல்வேலியில் உள்ள தனது வீட்டில் தவறி விழுந்ததில் வைகோவுக்கு வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வைகோ, நலமுடன் இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.


Nainaar Nagendran: ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பிய சிபிசிஐடி..


சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 4 கோடி விவகாரத்தில் நாளை மறுநாள் பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராகும் படி சிபிசிஐசி சம்மன் அனுப்பியுள்ளது.


திருச்சியில் வாடகை வேன் உரிமையாளர்கள் போராட்டம்- ஆவின் பால் தட்டுபாடு, பொதுமக்கள் அவதி


திருச்சி ஆவின் பால் பண்ணையில் இருந்து பால் பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. பால் பாக்கெட் எடுத்து செல்லும்  வாடகை வேன்களுக்கு கடந்த சில மாதங்களாக முறையான வாடகையை ஆவின் நிர்வாகம் தரவில்லை, என திடீரென்று வேன் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. ஆவின் நிர்வாகம் மக்கள் பயன்படுத்தக்கூடிய அத்தியாவசிய பொருளான பால் விநியோகம் செய்யும், வாடகை வேன்களுக்கு முறையாக வாடகையை செலுத்தி இருக்க வேண்டும். ஏன் காலதாமதம் படுத்தினார்கள் என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மாநில அரசு ஆவின் நிர்வாகத்தில் நடைபெறக்கூடிய சிக்கல்களை உடனடியாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆவின் பால் இனி வரும் காலங்களில் தட்டுப்பாடு ஏற்படாமல் பொதுமக்களுக்கு வழங்குவதற்கு உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டுமென பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.


மதுரையில் 7 மணி நேரத்திற்கு மேல் மின்சாரம் இன்றி தவித்த மக்கள் - காரணம் என்ன?


அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணியின்போது இரும்பு சாரம் சரிந்து விழுந்த விபத்தால் 7 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் இன்றி பொதுமக்கள் வணிக நிறுவனத்தினர் தவித்தனர்.


“அண்ணா..நோ கமெண்ட்ஸ்'' ; மோடி, இளையராஜா பற்றிய கேள்வியை தவிர்த்த ரஜினி!


ஒவ்வொரு வருடமும் இமயமலை செல்கிறேன். அந்த முறை அங்கு சென்று விட்டு கேதர்நாத், பாபாஜி குகை எல்லாம் செல்ல உள்ளேன் என ரஜினிகாந்த் கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இமயமலை பயணம் மேற்கொண்டுள்ளார்.