சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று வெயில் இயல்பை விட அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.


செங்கல்பட்டு , காஞ்சிபுரம்  வானிலை நிலவரம் எப்படி உள்ளது ?


கடந்த வாரம் வரை காஞ்சிபுரம் ( kanchipuram weather report ) ,  செங்கல்பட்டு ( Chengalpattu weather report )  மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் தெளிவாக காணப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த வாரம்  அவ்வப்பொழுது மேகமூட்டத்துடன்,  பகல் மற்றும் இரவு நேரங்களில்  கோடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காஞ்சிபுரம் பகுதிகளில் அவ்வப்பொழுது குளிர்ந்த காற்று வீசி வந்தது. சில நேரங்களில் மழையும்  பெய்து வந்தது. இந்தநிலையில் நேற்று முதல் காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் கடும் வெயில் வாட்டி வதைக்க துவங்கியுள்ளது.  மே மாத ஆரம்பத்தில் இருந்ததை போல் மீண்டும் வெயில் வாட்டி வதைக்க துவங்கி இருப்பதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்


இன்று எதிர்பார்க்கப்படும் வானிலை ?


இன்று அதிகபட்ச வெப்பநிலை 36.00 - 37.00  டிகிரி செல்சியஸ் ஆக  பதிவாகும்.  குறைந்தபட்ச வெப்பநிலை 28.00 -27.00  டிகிரி செல்சியஸ் ஆகும்  காற்றின்  அதிகபட்ச ஈரப்பதம்  50 சதவீதமாகவும்  மற்றும்  காற்றின் குறைந்தபட்ச ஈரப்பதம் 30% ஆகவும் இருக்க வாய்ப்புள்ளது. சராசரி காற்றின் வேகம் 22 கிலோமீட்டர் ஆகும்   மேற்கு திசையிலிருந்து காற்று வீச கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இன்று காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை. இயல்பை விட கூடுதலாக அனல் காற்று உணரப்படும்.


சென்னை வானிலை முன்னறிவிப்பு


இன்று அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆக  பதிவாகும்.  குறைந்தபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் ஆகும்.  காற்றின்  அதிகபட்ச ஈரப்பதம்  50 சதவீதமாகவும்  மற்றும்  காற்றின் குறைந்தபட்ச ஈரப்பதம் 40% ஆகவும் இருக்க வாய்ப்புள்ளது. சராசரி காற்றின் வேகம் 22 கிலோமீட்டர் ஆகும்   தென்மேற்கு திசையிலிருந்து காற்று வீச கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை.