தமிழ்நாட்டில் உள்ள 26 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருச்சி, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி,ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய 26 மாவட்டங்களில் உள்ள பல்வேறு இடங்களில், இன்று மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


எதிர்பாராத விபத்து - கல்பாக்கத்தில் பாதுகாப்பு படை வீரர் மீது துப்பாக்கி தோட்டா பாய்ந்து உயிரிழப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது கல்பாக்கம் அனல் மின் நிலையம். அங்கு பணியாற்றும் தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கி வெடித்ததில் உயிரிழந்தார். இவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 37 வயதான ரவி கிரண் என்பது தெரிய வந்துள்ளது. அவர் பயன்படுத்திய துப்பாக்கியின் பெயர் இன்சாஸ் பட் எண் 68 ஆகும். பணி முடிந்து கல்பாக்கம் நிலையம் பேருந்தில் அவர் தனது அறைக்கு சென்று கொண்டிருந்த பொழுது இந்த விபத்து நடைபெற்றுள்ளது. முதற்கட்ட விசாரணையில் அவர் உடலுடன் அந்த துப்பாக்கியை அனைத்து சென்றிருக்கலாம் எனவும், பேருந்து பள்ளத்தில் ஏறி இறங்கிய பொழுது துப்பாக்கியில் இருந்து தோட்டா பாய்ந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 


Mettur Dam: திடீரென குறைந்த மேட்டூர் அணை நீர்வரத்து - இன்றைய நீர் நிலவரம் இதுதான்


தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 137 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 1,120 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 691 கன அடியாக குறைந்துள்ளது.


போலீஸ் விசாரணைக்கு பின் உயிரிழந்த ஓட்டல் உரிமையாளர்: மறு பிரேதபரிசோதனைக்கு உத்தரவு


விழுப்புரம் : போலீஸ் விசாரணைக்கு சென்று வந்த ஓட்டல் மாஸ்டர் இறந்த விவகாரத்தில் அவரது உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


விழுப்புரம் : போலீஸ் விசாரணைக்கு சென்று வந்த ஓட்டல் மாஸ்டர் இறந்த விவகாரத்தில் அவரது உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்கள் கண்காணிப்பக மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசிர்வாதம், மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாறன், மக்கள் பாதுகாப்புக்கழக தலைவர் ரமேஷ் உள்ளிட்டோர் விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.


இடிந்து விழுந்த பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த காவிரி துலாக்கட்டம் - அதிர்ச்சியில் பக்தர்கள்


மயிலாடுதுறை காவிரி துலாக்கட்ட கரை இடிந்து விழுந்ததை அடுத்து அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளது. 


இது, தமிழ்நாட்டில் இதுவரை நிகழ்ந்த முக்கிய செய்திகளின் சாரம்சமாகும். விரிவான செய்திகளுக்கு ஏபிபி நாடு வலைதளத்தில் பார்க்கவும்