தமிழ்நாட்டில் இன்றைய நாளில் 3 மணி வரையிலான நடந்த முக்கிய செய்திகளை தொகுத்து வழங்கியிருக்கிறோம். இது, செய்தியின் சுருக்கம் மட்டுமே. செய்திகளை விரிவாக படிக்க ஏபிபி நாடு ABP NADU வலைதளத்தில் சென்று படிக்கவும்


Heavy Rains: மக்களே! நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு மிக கனமழையாம்! எச்சரித்த இந்திய வானிலை ஆய்வு மையம்!


 தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், அடுத்த 3 மணிநேரத்தில் திருவள்ளூர் உள்பட 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


10th 12th Results 2024: குறைந்த தேர்ச்சி பெற்ற 10, பிளஸ் 2 தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு அழைப்பு; பள்ளிக் கல்வித்துறை அதிரடி



’’2023 – 2024ஆம் கல்வியாண்டிற்கான பத்து மற்றும்‌ பன்னிரெண்டாம்‌ வகுப்பு அரசு பொதுத்தேர்வில்‌ 100 சதவீதம்‌ தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்கள்‌ மற்றும்‌ உயர்‌ அலுவலர்களுக்கான சீர்மிகு பாராட்டு விழா சென்னையில்‌ நடைபெறுகிறது. அரசுப்பள்ளிகள்‌ வறுமையின்‌ அடையாளம்‌ அல்ல; அது பெருமையின் அடையாளம்‌ என்பதை தொடர்ந்து பறைசாற்றும்‌ விதமாக நடப்புக்‌ கல்வியாண்டின்‌ பொதுத்‌ தேர்வு முடிவுகள்‌ எடுத்துக்காட்டு கின்றன.


Palani Murugan Temple: பழனி முருகன் கோயில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்


அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் மொட்டை எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களை செலுத்தி வருகின்றனர். தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படும் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. இந்த அறுபடை வீடுகளில் மூன்றாம் படை திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயிலாகும். தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து பாதயாத்திரையாக பழனிக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள்.


Dengue Fever: உஷார்.. பரவும் டெங்கு காய்ச்சல்! செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாது என்ன?


தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதாக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார்.


Accident: அச்சுறுத்தும் செங்கல்பட்டு சாலைகள்! வெறும் 4 மாதத்தில் 541 விபத்து! 154 பேர் உயிரிழப்பு!


அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட மாவட்டத்தில் , ஜனவரி 1 தேதி முதல் இன்று வரை அதாவது 136 நாட்களில் , 545 விபத்துக்கள் நடைபெற்று உள்ளது. இதில் பெரும்பாலான விபத்துக்கள் ஆத்தூர் சுங்கச்சாவடியில் இருந்து பரனூர் சுங்கச்சாவடிக்கு இடையிலான பகுதியில் நடைபெற்றுள்ளது. இந்த விபத்தில் 131 விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. மொத்தம் நடைபெற்ற விபத்தில் 154 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 612 நபர்கள் விபத்தில் காயம் அடைந்துள்ளனர். இதுபோக மறைமலை நகர் மற்றும் கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளிலும் அதிக அளவு விபத்துக்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன.


நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!


நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மருதகுளம் பகுதியை சேர்ந்தவர் சங்கரசுப்பு. 32 வயது வயதான இவர் கூலி வேலைக்கு சென்று வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் தனது பூர்விக சொத்தில்  பங்காளிகள்  அவரது  பங்கை பிரித்து தரவில்லை என தெரிகிறது. அதனை தொடர்ந்து அவர் கேட்டு வந்த நிலையில் இது தொடர்பாக மூன்றடைப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். ஆனால் காவல் நிலையத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.  அதன் பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் வந்து மக்கள் குறைதீர்க்கும் நாளில் மனு அளித்து சென்றுள்ளார். ஆனால் அதிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை இதனை அடுத்து மனம் உடைந்த சங்கரசுப்பு கடந்த 13ம் தேதி  நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே அமர்ந்து இருந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத நேரம் உடலில் பெட்ரோலை ஊற்றி தீயை வைத்துக் கொண்டு ஆட்சியர் அலுவலகத்திற்குள் அலறல் சத்தத்துடன் ஓடி வந்தார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சங்கரசுப்பு இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.


TVK Party: விஜய் போட்ட உத்தரவு..! களத்தில் இறங்கிய தவெக கட்சியினர்


கோடை காலத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனம் சார்பில் பல்வேறு இடங்களில் இலவச நீர் மற்றும் மோர் பந்தல் அமைப்பது வழக்கம். இது பல்வேறு முக்கிய கட்சிகளின் முக்கிய  பணியாக கருதப்படுகிறது. அதேபோன்று தமிழக வெற்றி கழக நிர்வாகிகளும் தற்போது நீர் மோர் பந்தல் வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்து துவங்கியுள்ளனர். அந்த வகையில் வந்தவாசி புதிய பேருந்து நிலையம் செல்லும் வழியில் ஐந்து கண் பாலம் முனையில் கோடைக்கால வெப்பநிலையை கருத்தில் கொண்டு இரண்டாவது முறையாக பொதுமக்களுக்கு நீர்மோர் குளிர்ச்சியான பழங்கள் வழங்கும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.