CM MK Stalin Wish: "செஸ் உலகமே வியக்கிறது" டாப் 10க்குள் வந்த பிரக்ஞானந்தாவிற்கு முதலமைச்சர் வாழ்த்து


உலகின் தலைசிறந்த செஸ் வீரர் கார்ல்சனை வீழ்த்தி செஸ் தரவரிசைக்குள் 10வது இடத்திற்குள் வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


உலகின் பிரபலமான செஸ் தொடர்களில் ஒன்றான நார்வே செஸ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் சார்பில் பிரக்ஞானந்தா ஆடவர் பிரிவில் பங்கேற்றார். அவர் கிளாசிக்கல் பிரிவில் உலகின் நம்பர் 1 செஸ் வீரரான கார்ல்சனை அவருடன் ஆடிய 3வது சுற்றிலே வீழ்த்தினார். அதையடுத்து, உலகின் மற்றொரு தலைசிறந்த வீரரும், செஸ் தரவரிசையில் 2வது இடத்தில் உள்ளவருமான பேபியானோ காருவோனாவை 5வது சுற்றில் வீழ்த்தினார்.


"கருத்துக் கணிப்புகளை நம்பவும் முடியாது; புறந்தள்ளவும் முடியாது" - திருநாவுக்கரசு சொல்வது என்ன?


 காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசு காஞ்சிபுரத்தில் பேட்டி. காஞ்சிபுரம் முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர் சேகர் இல்ல திருமணத்தில் கலந்து கொள்ள நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த காங்கிரஸ் நிர்வாகியுமான திருநாவுக்கரசர் காஞ்சிபுரம் வருகை புரிந்து திருமணத்தில் மணமக்களை பல்லாண்டு காலம் வாழ வாழ்த்தினார்.  அதற்கு முன்பாக நேற்று இரவு காஞ்சி சங்கரமடத்தில் ஸ்ரீ விஜயேந்திரரையும், புகழ்பெற்ற தட்சிணாமூர்த்தி திருக்கோயில் சித்திரகுப்த திருக்கோயில் தனது மனைவியுடன் சிறப்பு சாமி தரிசனம் மேற்கொண்டார். அப்போது பேசிய இவர், கருத்துக் கணிப்புகளை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது , அதனை புறந்தள்ளி விடவும் முடியாது. சில நேரங்களில் துல்லியமான முடிவுகள் ஆக கூட அமையும் என தெரிவித்தார். 


Actor Karunas: நடிகர் கருணாஸிடம் 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் - சென்னை ஏர்போர்ட்டில் பெரும் பரபரப்பு


தமிழ் திரையுலகின் பிரபல நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமாக இருப்பவர் நடிகர் கருணாஸ். இவர் இன்று சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலமாக செல்ல திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் இவர் சென்றபோது இவரையும், இவரது உடைமைகளையும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.


அகில இந்திய ஹாக்கி போட்டி: இறுதிப் போட்டிக்கு போபால்,புவனேஸ்வர் அணி தகுதி


கோவில்பட்டியில் நடைபெற்று வரும் அகில இந்திய ஹாக்கி போட்டி-இறுதி போட்டிக்கு போபால் நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் ,புவனேஸ்வர் நிஸ்வாஸ் அணி தகுதி.


அகில இந்திய ஹாக்கி போட்டிகளில் முதலிடம் பெறும் அணிக்கு ரூபாய் ஒரு இலட்சமும், இரண்டாவது இடம் பெறும் அணிக்கு எழுபத்து ஐந்தாயிரமும், மூன்றாவது இடம் பெறும் அணிக்கு ஐம்பதாயிரமும், நான்காவது இடம் பெறும் அணிக்கு முப்பதாயிரமும் இலட்சுமி அம்மாள் நினைவு சுழற்கோப்பையுடன் வழங்கப்பட உள்ளது.


மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது


இன்றைய நீர் நிலவரம் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,100 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது