கள்ளக்குறிச்சி சம்பவம் - 104 பேரின் உடல்நிலை சீராக உள்ளதாக தகவல்
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருபவர்கள் 108 பேரில் 104 பேரின் உடல்நிலை சீராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 4 பேர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
தர்மபுரியில் போதை பொருள் எதிர்ப்பு மற்றும் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
தருமபுரியில் போதை பொருள் எதிர்ப்பு மற்றும் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்டீபன் ஜேசுபாதம் தொடங்கி வைத்தார்.
திருச்சியில் சோகம்..கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற சிறுவன் சடலமாக மீட்பு:
திருச்சி கொள்ளிடம் ஆற்றில் நேற்று மதியம் நண்பருடன் குளிக்க சென்ற பத்தாம் வகுப்பு சிறுவன் நீரில் மூழ்கி சடலமாக மீட்கப்பட்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒவ்வொரு முறையும் காவேரி, கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் நீர்வரத்து அதிகரிக்கும்போது மாவட்ட நிர்வாகம் சார்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் அது அலட்சியப் போக்கில் எடுத்துக்கொள்ளாமல் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சாத்தனூர் அணை முதலை பண்ணை வளாகத்தில் இரவு காவலாளியை கட்டிப்போட்டு சந்தன மரம் வெட்டி கடத்தல்.!
முதலைப் பண்ணை வளாகத்தில் முகமூடி அணிந்து நான்கு பேர் கொண்ட மர்ம ஆசாமிகள் இரவு காவலாளியை கட்டிப் போட்டுவிட்டு சந்தன மரத்தை வெட்டி கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சாத்தனூர் அணை நுழைவாயில் மற்றும் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். காவலாளியை கட்டிப்போட்டு விட்டு முகமூடி ஆசாமிகள் சந்தன மரத்தை வெட்டி கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
CM Stalin - NEET : முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு: முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம்
Chief Minister Stalin- PG NEET :முதுநிலை மருத்துவ படிப்பு நுழைவுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது எண்ணற்ற மருத்துவர்களை விரக்தியில் ஆழ்த்தியுள்ளது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொழில்முறை படிப்புகளுக்கான நியாயமான மற்றும் சமமான தேர்வு செயல்முறையை உருவாக்குவதற்கு, தொழில்முறை படிப்புகளுக்கான தேர்வு செயல்முறையைத் தீர்மானிக்க மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காக, மிக முக்கியமாக, எங்கள் மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் மனதில் நம்பிக்கை மற்றும் நம்பிக்கையை மீண்டும் நிறுவுவதற்காக இணைவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து பாஜக குழு ஆளுநரை சந்தித்து புகாரளிக்கும் - அண்ணாமலை பேட்டி
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து, பாஜக சார்பில் இன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மதியம் தமிழக ஆளுநரிடம் தொலைபேசியில் அழைத்து புகார் சொல்லியிருக்கிறேன். பேசக்கூடிய சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது என்பதை சொல்லி இருக்கின்றேன். தனிப்பட்ட முறையில் எங்களுடைய கருத்து சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளது. வரும் திங்கட்கிழமை காலை 11 மணிக்கு ஆளுநர் கொடுத்துள்ளார். இது தொடர்பான பாஜக குழு ஆளுநரை நேரில் சந்தித்த்து புகார் அளிக்க இருக்கின்றனர். திமுகவிற்கு இருக்கும் தொடர்பையும் ஆளுநரிடம் சொல்ல இருக்கின்றோம் என அண்ணாமலை தெரிவித்தார்.
Mettur Dam : மேட்டூர் அணையின் நீர்வரத்து 140 கன அடியாக அதிகரிப்பு.
மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், வினாடிக்கு 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி உள்ளன. இருப்பினும் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 80 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 138 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 140 கன அடியாக அதிகரித்துள்ளது.