Vikravandi By Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: முதல்நாளே களைகட்டிய வேட்புமனு தாக்கல்
டெபாசிட் தொகைக்கு சில்லரை காசுகள், பணமாலை அணிந்துகொண்டும், டிஜிட்டல் மையத்தை வலியுறுத்தி கிரிடிட் கார்டுகள் ஏடிஎம் கார்டுகளை மாலையாக அணிந்து கொண்டு வந்த வேட்பாளர்கள்
Vikravandi By - Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் - அண்ணாமலை
Vikravandi By - Election: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், பாமக போட்டியிடும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
"எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க படிங்க" - ஐம்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
பள்ளி மாணவர்களைப் பார்க்கும்போது என் இளமை திரும்புவது போன்று, எனர்ஜி கிடைக்கிறது என முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவர்களைப் பார்க்கும்போது என் இளமை திரும்புவது போன்று, எனர்ஜி கிடைக்கிறது என பள்ளிக் கல்வித்துறையின் ஐம்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க..
Amma Unavagam: புதுப்பொலிவு பெறும் சென்னை அம்மா உணவகங்கள்.. புதிய உணவுகளும் விரைவில் அறிமுகம்!
கடந்த 2011 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பொறுப்பேற்றது. அப்போது கொண்டு வரப்பட்ட திட்டங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது “அம்மா உணவகம்”.
சென்னையில் உள்ள அம்மா உணவகங்களின் தரத்தை மேம்படுத்த ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்து செய்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
முல்லை பெரியாறு அணையின் 2, 9 ஆகிய ஷட்டர்களை இயக்கி பார்த்து மத்திய குழு ஆய்வு
2022 ல் இக்குழுவில் இரு மாநில தொழில் நுட்ப வல்லுனர்கள் இருவரை சேர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது இந்த குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் ராகேஷ் உள்ளார். முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணைய தலைமைப் பொறியாளர் ராகேஷ் கசியப் தலைமையிலான மத்திய கண்காணிப்பு குழுவினர் அணையின் 2 மற்றும் 9 ஆகிய ஷட்டர்களை இயக்கி பார்த்து ஆய்வு மேற்கொண்டனர்.
Tamil Pudhalvan Scheme: போடு வெடிய: மாணவர்களுக்கும் ஆகஸ்ட் முதல் மாதாமாதம் ரூ.1000: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு- விவரம்
அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரியில் சேர்ந்து உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் மாதாமாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 1000 Rs For School Students in Tamilnadu: அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரியில் சேர்ந்து உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் மாதாமாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழ்ப் புதல்வன் திட்டம் என்ற பெயரில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.