BJP TamilNadu : “இஷ்டத்திற்கு பேசக் கூடாது – தலைமைக்கு கட்டுப்படனும்” பாஜக மேலிடம் போட்ட உத்தரவு !
தமிழ்நாட்டில் கட்சியை மிகப்பெரிய அளவில் வளர்க்க தலைமை முடிவெடுத்து அதற்கான முன்னெடுப்புகளை எடுக்க திட்டமிட்டிருக்கும் நிலையில், பாஜகவில் தமிழிசை உள்ளிட்டோர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதும், சிலர் கோஷ்டியாக இணைந்து ஆலோசிப்பதும் டெல்லி பாஜக தேசிய தலைமையின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.
”அண்ணாமலை மத்திய அமைச்சர் ஆகப்போகிறார், பாஜக மாநில தலைவராக மீண்டும் தமிழிசை நியமனம் செய்யப்போகிறார் என்ற தகவல் பல இடங்களில் தீயாக பரவிய நிலையில், இந்த புதிய நடைமுறையை பாஜக அமல்படுத்தவுள்ளது. இஷ்டத்திற்கு பேசக் கூடாது – தலைமைக்கு கட்டுப்படனும்” பாஜக மேலிடம் போட்ட உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Chandrababu Naidu: ஆந்திர முதலமைச்சராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு - ஓபிஎஸ், நடிகர் ரஜினி உள்ளிட்டோர் பங்கேற்பு
Chandrababu Naidu: ஆந்திர மாநில முதலமைச்சராக நான்காவது முறையாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். இந்நிலையில், ஆந்திர முதலமைச்சராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்,
மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா, நிதின் கட்கரி, ராம் மோகன் நாயுடு, ஜிதன் ராம் மஞ்சி, கிஷன் ரெட்டி மற்றும் சிராக் பஸ்வான் ஆகியோர் பங்கேற்கின்றனர். இதோடு, பல மத்திய இணையமைச்சர்களும் விழாவில் பங்கேற்றனர். ஓபிஎஸ் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களுடன், ரஜினிகாந்த் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
Vanathi Srinivasan: ’அடுத்த பாஜக தலைவர் யார் என்பது யாருக்கும் தெரியாது’ - வானதி சீனிவாசன்
"1980-ல் அது பாஜகவை மாறியது தொடங்கி இன்று வரை, பாஜகவின் தலைவர் யார் என்பது அவர் தேர்ந்தெடுக்கப்படும் முறை யாருக்கும் தெரியாது.
கேரளாவில் மண் சரிவில் சிக்கி தமிழக தொழிலாளர்கள் 3 பேர் படுகாயம் தேசிய நெடுஞ்சாலையை அறிவியல் பூர்வமாக அமைக்காததால், தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.
கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியின் போது அடிமாலி அருகே 14வது மைலில் மண் சரிவு ஏற்பட்டு தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். மண்ணில் சிக்கிய தொழிலாளர்களை அப்பகுதி மக்கள் மற்றும் பிற தொழிலாளர்கள் மீட்டனர். தேசிய நெடுஞ்சாலையை அறிவியல் பூர்வமாக அமைக்காததால், தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.
Salem Accident: சேலம் அருகே கோர விபத்து:
3 வயது குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்த சோகம் பேருந்தில் வந்த பத்திற்கும் மேற்பட்டோருக்கு காயங்கள் ஏற்பட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Mettur Dam : வறட்சியில் மேட்டூர் அணை : ஜூன் 12ம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயிகள் கவலை.
தமிழ்நாடு டெல்டா மாவட்ட விவசாயிகளும் தாயாக விளங்கும் மேட்டூர் அணை கடும் வறட்சியால் காணப்படுகிறது. மேட்டூர் அணையில் மொத்த நீர் இருப்பு 93.47 டி.எம்.சி., நீர்மட்டம் 120 அடி தேக்கி வைக்கும் வகையில் கட்டப்பட்டது.
இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டுமானால் கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் அல்லது பருவமழை பெய்தால் மட்டுமே தண்ணீர் திறக்கும் முடியும் நிலையில் உள்ளது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.