சென்னை ஆணயர் மாற்றம்,


பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தேசிய கட்சியின் மாநில தலைவர் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தி.மு.க. அரசு மீது கடும் விமர்சனங்களை உண்டாக்கியது. 


இந்த நிலையில், தமிழக காவல்துறை மீதும் எதிர்க்கட்சிகளும், அரசியல் விமர்சகர்களும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிடம் மாற்றப்பட்டு, சென்னையின் புதிய காவல் ஆணையராக அருண் ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.


வண்டல் மண்: முதலமைச்சர் அனுமதி ஆணை


தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் இயற்கை வளங்கள் துறையின் சார்பில், நீர்வளத் துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஏரி, குளம் மற்றும் கண்மாய்களிலிருந்து களிமண் மற்றும் வண்டல் மண்ணை விவசாய பயன்பாட்டிற்கும், மண்பாண்டம் செய்வதற்கும் கட்டணமின்றி எடுத்து பயன்பெறுவதற்கான அனுமதி ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.


“நான் விசுவாசமற்றவனா? அதை பேச இபிஎஸ்க்கு அருகதை இல்லை” - கொந்தளித்த ஓபிஎஸ்


அதிமுகவுக்கும் அம்மா ஜெயலலிதாவுக்கு எவ்வளவு விசுவாசமாக இருந்தேன் என்பதை அவர்களே மக்களுக்கு பறைசாற்றி சொல்லியிருக்கிறார்கள்.


பிரதமர் மோடி வலியுறுத்தலின் பேரிலேயே துணை முதல்வர் பதவியை ஏற்றேன். எந்தக் காலத்திலும் எடப்பாடி பழனிசாமியிடம் யாசகம் கேட்கமாட்டேன். எனக்கு அதற்கான அவசியமும் இல்லை. அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று தான் நான் சொல்லி வருகிறேன். கட்சி இணைவதற்கு நான் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார். கட்சி இணைய எடப்பாடி பழனிசாமி எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாரா என்பதுதான் என் கேள்வி” என ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்


பாஜகவுக்கு வழி விட்டு அதிமுக தேர்தலை புறக்கணித்து இருக்கிறார்கள் - அமைச்சர் உதயநிதி


அதிமுக தேர்தலில் போட்டியிடவில்லை எதனால் தெரியுமா ? அவர்களுக்கு பயம், தொடர் தோல்வியை சந்தித்து வருகிறார்கள்.


மேட்டூர் அணையின் நீர்வரத்து மீண்டும் சரிவு - வினாடிக்கு 2,149 கன அடியாக குறைந்தது


மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், வினாடிக்கு 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.


30 ஆண்டுக்கு பின் செங்கல்பட்டு மக்களுக்கு ஹேப்பி நியூஸ்..ரூ.97 கோடியில் தயாராகும் புதிய பேருந்து நிலையம்..!


Chengalpattu New Bus Stand: புதிய பேருந்து நிலையம் சுமார் 61 பேருந்துகள் நிறுத்தும் அளவிற்கு இடவசதியுடனும், 44 நடைமேடைகளுடனும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.


சென்னை விமான நிலையத்தை அலறவிட்ட பயணி... பச்சை நிறத்தில் அட்டைப்பெட்டியில் இருந்த உயிர்


பச்சோந்திகளை சட்டவிரோதமாக மறைத்து, சென்னைக்கு கடத்திக் கொண்டு வந்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆண் பயணியை சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரணை.


கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமாரின் ராஜினாமா ஏற்பு - 


மேயர் கல்பனா ராஜினாமா கடிதம் கொடுத்த நிலையில், அது தொடர்பாக கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ராஜினாமா ஏற்கப்பட்டது.