விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவிற்கு வாக்களிக்க வலியுறுத்தி, முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதில், வன்னியர்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீடு வழங்கியவர் கலைஞர், இந்த மாதம் கூடுதலாக 1.48 லட்சம் பெண்கள் மகளிர் உரிமை தொகை பெற உள்ளனர். விக்கிரவாண்டி தொகுதிக்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தது திமுக ஆட்சி.  பாஜக கூட்டணியை தோற்கடிப்பதன் மூலம் சமூக நீதிக்கு துரோகம் செய்தவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்” என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.


மெத்த படித்தவர், மிகப் பெரிய அரசியல் ஞானி - அண்ணாமலையை சரமாரியாக சாடிய எடப்பாடி பழனிசாமி ”


கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுக பற்றி சில விமர்சனங்களை தெரிவித்துள்ளார். அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு குறித்து ஏற்கனவே அறிவித்துள்ளது. அதற்கான காரணங்களை தெரிவித்துள்ளோம். இருந்தும் அதிமுகவை குறை சொல்லி திட்டமிட்டு அண்ணாமலை பேசியுள்ளார். இந்த தேர்தலில் அதிமுக போட்டிக்கு வந்தால் 3 அல்லது 4 ஆம் இடம் தான் வந்திருக்கும் என அவர் கூறியுள்ளார். மெத்த படித்தவர், மிகப் பெரிய அரசியல் ஞானி அவர். அவரது கணிப்பு அப்படி உள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரத்தில் அதிமுக வேட்பாளர் சுமார் 6 ஆயிரம் வாக்கு மட்டுமே குறைவாக பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தில் அதிமுக தான் உள்ளது.


அண்ணாமலை வந்த பிறகு தான் பாஜக வளர்ந்துள்ளது போல மாயத் தோற்றத்தை உருவாக்கி வருகிறார். அது உண்மை அல்ல என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  தெரிவித்துள்ளார்


Anbumani : “இதை செய்தால் திமுக ஒரு வார்டில் கூட ஜெயிக்க முடியாது” அன்புமணி ராமதாஸ் அதிரடி..!


கள்ளக்குறிச்சி கள்ளச்சாரயம் சம்பவம் தற்பொழுது எந்த முன்னேற்றமும் இல்லை, இது ஒரு நாடகம் அதனால் தான் CBI விசாரிக்க வேண்டும் என கூறிவருகிறேன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி ..


10 நாட்களில் அருகில் விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தினால் ஒருவர் உயிரிழந்து உள்ளார். கள்ளக்குறிச்சி கள்ளச்சார சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணை மேற்கொள்வதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை ஆனால் சிபிசிஐடி மீது மரியாதை உள்ளது. கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும், இதற்குக் காரணம் அரசியல்வாதிகள்,போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர். அதனால் தான் சிபிஐ விசாரணை வேண்டும். இந்த சம்பவத்தில் அரசியல்வாதிகள் யார் யார் என்பது முதலமைச்சருக்கு தெரியாதா என கேள்வி எழுப்பினார்.


தமிழ்நாட்டில் சின்னம் வரையக்கூட ஆளில்லாத கட்சி பாஜக - திருமாவளவன்


மோடி, அமித்ஷா சொல்லித்தான் அதிமுக இந்த தேர்தலை புறக்கணித்துள்ளது - திருமாவளவன்


மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 1,281 கன அடியாக அதிகரிப்பு


மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.


தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி உள்ளன. இருப்பினும் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 818 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 1,223 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 1,281 கன அடியாக அதிகரித்துள்ளது.


Jobs: செங்கல்பட்டு அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் வேலை.. 


Chengalpattu Jobs : தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூகஅறிவியல் பாட பிரிவுகளில் 10 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 41 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தனது எழுத்து பூர்வமான விண்ணப்பத்தினை உரிய கல்வி, தகுதி, சான்று ஆவணங்களுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலருக்கு முகவரியிட்டு கீழ்கண்ட முகவரிக்கு 10.07.2024 அன்று மாலை 5.45 க்குள் ஒப்படைக்கலாம். முகவரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,  செங்கல்பட்டு.