இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:


’’தமிழ் திரை உலகை சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள், புரட்சிக் கலைஞர் கேப்டனை ஏஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகிறது. 


குறிப்பாக இதுபோன்ற செய்திகள் ஆடியோ வெளியீட்டு விழாவில் வருகின்றன. எங்களிடம் முன் அனுமதியில்லாமல் இது மாதிரியான அறிவிப்புகள் வருவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும்.


இதுவரை யாரும் எந்த அனுமதியும் பெறவில்லை


எந்த விதத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற்ற பின்பே, அறிவிப்பை வெளியிட வேண்டும். ஏஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக இதுவரை யாரும் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.


எனவே அனுமதியில்லாமல் பத்திரிகை செய்திகள், ஊடக செய்திகள், ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.’’ 


இவ்வாறு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார். 


’தி கோட்’ திரைப்படத்தில் விஜயகாந்த்? 


வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தி கோட்’ திரைப்படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் நடிகர் விஜயகாந்தைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக, தனியார் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்து இருந்தார்.


இதற்கிடையே நடிகர் விஜயகாந்தைத் திரைப்படத்தில். எந்த விதத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற்ற பின்பே, அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று பிரேமலதா தெரிவித்து உள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.