விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் ஆளுங்கட்சியினர் மக்களிடம் பணத்தை கொடுத்து வாக்குகளை பெற்றுவிடலாம் என்று நினைத்து செயல்பட்டு வருகிறார்கள் என்று பாமக தலைவர் அன்புமணி பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.


 திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சொந்தமானது


இது நிர்வாகம் அல்ல திறமை இல்லாத அரசு மற்றும் மாநிலங்களில் மதுவை வைத்துதான் நிர்வாகம் செய்கிறார்களா என்பதை யோசிக்க வேண்டும். தமிழகத்திற்கு டாஸ்மாக் நிறுவனத்திற்கு 5 6 நிறுவனங்களில் இருந்து விநியோகம் செய்கிறார்கள். அதில் இரண்டு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சொந்தமானது டாஸ்மாக் அரசு துறை சார்ந்தது டி.ஆர்.பாலு அவரைச் சார்ந்த நிறுவனம் டாஸ்மார்க் சப்ளை செய்து வருகிறது.


கள்ளச்சாராயம் விற்க கூடாது என்று சட்டமன்றத்தில் கடுமையான சட்டம் கொண்டு வந்தார்கள். திமுக ஆட்சியால் கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாது. கள்ளச்சாராயம் தொடர்பாக சட்டத்தை கொண்டு வந்தால் சட்டத்தை மதிக்க வேண்டும், கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த வேண்டும் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் கிராமத்தில் அண்மையில் ஒருவர் கள்ள சாராயத்தில் இறந்துள்ளார், இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் கள்ளக்குறிச்சியில் 66 பேர் உயிரிழந்துள்ளனர்.


கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும்


10 நாட்களில் அருகில் விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தினால் ஒருவர் உயிரிழந்து உள்ளார். கள்ளக்குறிச்சி கள்ளச்சார சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணை மேற்கொள்வதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை ஆனால் சிபிசிஐடி மீது மரியாதை உள்ளது. கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும், இதற்குக் காரணம் அரசியல்வாதிகள்,போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர். அதனால் தான் சிபிஐ விசாரணை வேண்டும். இந்த சம்பவத்தில் அரசியல்வாதிகள் யார் யார் என்பது முதலமைச்சருக்கு தெரியாதா என கேள்வி எழுப்பினார்.


 கள்ளச்சாராயர சம்பவத்தினால் மீண்டும் உயிர் பலிகள் ஏற்படக்கூடாது என்பதற்காக சிபிஐ விசாரணை கோரி உள்ளோம். கள்ளக்குறிச்சி சம்பவம் மூன்று ஊர்களில் நடந்த சம்பவம் தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். காவல் நிலையம் அருகே இந்த கிராமம் உள்ளது காலங்காலமாக அந்த கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி வருகிறார்கள். இதற்கு இதுதான் திமுக நிர்வாக திறமை வருகிறார்கள் அமைச்சர்கள் சிலர் வியாபாரிகளாக உள்ளனர். 


விக்கிரவாண்டி தேர்தலில் திமுக எல்லா இடங்களையும் ஆக்கிரமித்து பணம் கொடுத்து வருகின்றது 


பஞ்சாயத்து தேர்தலை விட மிக மோசமாக நடந்து கொண்டிருக்கிறது இந்த இடைத் தேர்தல். அதிகாரி ஆர்டிஓ  என்ன செய்ய முடியும். அங்குள்ள அமைச்சர்களை எதிர்த்து தேர்தல் அதிகாரி பேச முடியுமா? திமுக எல்லா இடங்களையும் ஆக்கிரமித்து பணம் கொடுத்து வருகின்றனர். யாரும் எங்களுக்கு சமூக நீதி தொடர்பாக  பாடம் எடுக்க வேண்டாம். அதே நேரத்ஹ்டில் சமூக நீதிக்கும் திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அவர்கள் அது குறித்து பேச எந்த தகுதியும் இல்லை செல்வ பெருந்தகை தமிழ்நாட்டில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை வைக்க வேண்டும். தமிழ்நாட்டில் 69 இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்துள்ளது. ஜாதி வரி கணக்கெடுப்பு நடத்து 9 சதவீதம் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டால் திமுக ஒரு வார்டு கூட ஜெயிக்க முடியாது. மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது என பாம தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.