TVK Vijay: நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்


நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை என்று நடிகர் விஜய் பேசியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் மாணவர்களுக்கான கல்வி விருது வழங்கும் விழாவின் இரண்டாவது கட்டம் இன்று நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கும் முன்பு நடிகரும், தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் பேசியதாவது, நீட் தேர்வு: "நீட் தேர்வு என்பது தமிழ்நாட்டில் மாணவ, மாணவிகளை கிராமப்புற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர் என்பதுதான் சத்தியமான உண்மை என விஜய் தெரிவித்தார். 


Group 1 Exam Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு;


Group 1 Exam Hall Ticket 2024: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பி, குரூப் 1 சி தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டு அரசுத் துறைகளில் காலியாக உள்ள குரூப் 1 பி, குரூப் 1 சி பணியிடங்களுக்கான தேர்வு ஜூலை 12ஆம் தேதி அன்று நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஹால் டிக்கெட்டைப் பெற்றுக்கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.


அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது


அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூபாய் 5 லட்சம் மோசடி செய்த  போலி நிருபர் கைது. சின்னமனூர் காவல்துறையினர் விசாரணை .


உத்தமபாளையம் மெஜஸ்டிக் நீதிமன்ற உத்தரவின்படி சின்னமனூர் காவல்துறையினர் விஜயலிங்க ராஜாவை கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர். நிருபர் என்ற போர்வையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மதுரை கப்பலூர் டோல்கேட்டை மக்களின் கோரிக்கையை ஏற்று அகற்றுங்கள் - ஆர்.பி.உதயகுமார்


கப்பலூர் டோல்கேட்டை அகற்றுவதற்கு அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.


வாக்காளர்களுக்கு கொடுக்க ரெடியா இருந்த வேட்டி, சேலைகள்.. கண்டுபிடித்த பாமக - விக்கிரவாண்டியில் பரபரப்பு


திமுக கிளைச்செயலாளர் வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுக்க வைக்கப்ட்டிருந்த வேட்டி சேலைகள் மற்றும் சட்டைகளை பாமகவினர் பறிமுதல் செய்து சாலை போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
விழுப்புரம்: விக்கிரவண்டி அருகேயுள்ள ஆசாரங்குப்பத்தில் திமுக கிளைச்செயலாளர் வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுக்க வைக்கப்பட்டிருந்த வேட்டி, சேலைகள் மற்றும் சட்டைகளை பாமகவினர் பறிமுதல் செய்து சாலை போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Mettur Dam : மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 818 கன அடியாக குறைந்தது.


மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், வினாடிக்கு 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி உள்ளன. இருப்பினும் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 1038 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 876 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 818 கன அடியாக குறைந்துள்ளது.