தமிழ்நாட்டில் நடப்பாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு இன்றுடன் முடிவடைகிறது. தமிழக உயர்கல்வித் துறையில் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றது.


இந்த கல்லூரிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான இளநிலை பட்டப்படிப்பு இடங்கள் உள்ளது. இதற்கான, 2024-25ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த மே 6ம் தேதி ஆன்லைன் வாயிலாக தொடங்கியது. விண்ணப்ப பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர். மே 19 ஆம் தேதி மாலை நிலவரப்படி 2 லட்சத்து 18 ஆயிரத்து 915 பேர் விண்ணப்பித்துள்ளனர்.


இதில் 1 லட்சத்து 73 ஆயிரத்து 211 பேர் விண்ணப்பக் கட்டணமும் செலுத்தியுள்ளனர். இந்நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி  (மே 20) விண்ணப்ப பதிவு நிறைவடைந்தது.


மாணவர்கள் மே 20 ஆம் தேதி மாலை வரை ww.tngasa.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.




மேலும், விண்ணப்ப பதிவு நிறைவடைந்த நிலையில், மாணவர்களின் தரவரிசை பட்டியல் கடந்த மே 27-ந் தேதி அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பிறகு, வருகிற 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையில், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் என சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. 


பொதுப்பிரிவு கலந்தாய்வு  (ஜூன்)10-ந்தேதி தொடங்கி 15-ந்தேதி வரை நடைபெற்றது. 2-ம் கட்ட பொதுப்பிரிவு கலந்தாய்வு (ஜூன்) 24-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடைபெற்றது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் இம்மாதம் ஜூலை 3-ந்தேதி தொடங்கும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்தது.


மேலும் கலந்தாய்வு தொடர்பான மேலும் விவரங்களை, https://www.tngasa.in என்ற இணையதளத்தின் மூலம் மாணவர்கள் அறியலாம் தெரிவிக்கபட்டது. 


இதனிடையே விண்ணப்ப பதிவிற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என மாணவர்கள் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.


அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இன்று முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்


இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயில இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்று முதல் 5- ந்தேதி வரை TNGASA இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.


8-ந்தேதி முதல் மாணவர் சேர்க்கையை நடத்த கல்லூரி முதல்வர்களுக்கு உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


மேலும், ஒரு பாடப்பிரிவில் சேர்ந்த மாணவர்கள் வேறோரு பாடப்பிரிவில் மாற விரும்பினால் அந்த துறையில் காலியிடம் இருப்பின் வாய்ப்பு வழங்க வேண்டும். ஏற்கனவே விண்ணப்பித்து சேர்க்கை பெற்று துறையில் இணையாத மாணவர்களின் இடங்களையும் நிரப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை கல்லூரிகளில் 2 சுற்று கலந்தாய்வு முடிவில் 63 சதவீத மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது.