Medical Counselling: தமிழ்நாட்டில் ஆக.21 முதல் மருத்துவக் கலந்தாய்வு


Tamilnadu Medical Counselling 2024: அகில இந்திய ஒதுக்கீட்டுக்குப் பிறகு ஒரு வாரம் கழித்து, ஆகஸ்ட் 21ஆம் தேதி அன்று தமிழ்நாட்டில் மாநிலக் கலந்தாய்வு தொடங்குகிறது. 


தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதற்கிடையே மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆக.19ஆம் தேதி வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை பாஜக புறக்கணிக்கிறது - செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு


கிராமப்புற பொருளாதாரத்தையே அழிவு நிலைக்கு கொண்டு செல்கிற முயற்சியில் ஒன்றிய பா.ஜ.க. அரசு ஈடுபட்டிருக்கிறது. - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை


100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை பாஜக புறக்கணிக்கிறது.. கிராமப்புறங்களில் வறுமையை ஒழிக்க, வாழ்வாதாரத்தை உயர்த்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த 100 நாள் வேலை திட்டத்திற்கு படிப்படியாக நிதியை குறைத்து பா.ஜ.க. புறக்கணித்து வருகிறது. இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில் கூறியது.


தமிழக அரசு இலவச சேலை திட்டத்தில், கூட்டுறவு சங்கத்துக்கு வழங்கும் நூலில் முறைகேடு


வந்தவாசியில் தமிழக அரசின் இலவச சேலை திட்டத்தில் நெசவாளர்களுக்கு கூட்டுறவு சங்கத்துக்கு வழங்கும் நூலில் முறைகேடு. உரக்கடைகாரர் வீட்டின் அறைக்கு சீல் வைத்த தாசில்தார்.


பக்தர்கள் கவனத்திற்கு.. பழனி முருகன் கோவிலில் இன்று ரோப்கார் சேவை இயங்காது - கோவில் நிர்வாகம் அறிவிப்பு


பழனி முருகன் கோவிலில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று ரோப்கார் சேவை நிறுத்தம் - கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


Mettur Dam: மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு 1.25 லட்சம் கன அடியாக அதிகரிப்பு.


கர்நாடகாவில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 2 லட்சம் கன அடிக்கும் மேல் காவிரி ஆற்றில் வந்து கொண்டுள்ளதால், மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.


மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளமான 120 அடியை எட்டி உள்ளது. மேட்டூர் அணை கட்டப்பட்டு 91 ஆண்டுகளில் தற்போது 43 வது முறையாக 580 நாட்களுக்குப் பிறகு முழு கொள்ளளவை நேற்று மாலை எட்டியது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பியதால் அங்கிருந்து உபரி நீர் அதிகளவில் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை கடந்த 27-ந் தேதி, 71 வது முறையாக எட்டியது.


திருச்சி: காவிரி, கொள்ளிடம் கரையோரம் உள்ள மக்களுக்கு அபாய எச்சரிக்கை


திருச்சி மாவட்டத்தில் காவிரி, கொள்ளிட கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் - மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்


திருச்சி மாவட்டத்தில்  காவிரி, கொள்ளிட கரையோர பகுதிகளில் மற்றும் அதனை ஒட்டிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சலவை தொழிலாளர்கள், பொதுமக்கள் தங்கள் உடமைகளுடன் மேட்டுப்பாங்கான, பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.