தமிழ் புதல்வன் திட்டத்திற்கு ரூ.401 கோடி நிதி ஒதுக்கீடு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ் புதல்வன் திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதாவது 2024-2025ம் நிதியாண்டு முதல் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு "புதுமைப் பெண் திட்டம்" போன்று மாதந்தோறும் ரூ.1,000/- உதவித் தொகை வழங்கும் "தமிழ்ப் புதல்வன் திட்டம்" செயல்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
"பட்ஜெட்டில் மாற்றாந்தாய் போக்கு" நாளை மறுநாள் தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. ஆர்ப்பாட்டம்
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு போதிய நிதி ஒதுக்காததை கண்டித்து நாளை மறுநாள் தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 3வது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்த பிறகு, இந்த ஆட்சிக்கான முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் பா.ஜ.க. ஆளாத மற்றும் பா.ஜ.க. கூட்டணி இல்லாத மாநிலங்களில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இந்த நிலையில், பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதை கண்டித்து தி.மு.க. போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது.
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு; குற்றம்சாட்டப்பட்ட 2 பேரிடம் சிபிசிஐடி விசாரணை
கோடநாடு கொள்ளை கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, உதயகுமார், ஜம்ஷீர் அலி, ஜித்தன் ஜாய் ஆகிய நான்கு பேருக்கு சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் வழங்கினர்.
பாஜக என்ன சாதி கட்சியா நடத்துகிறது ? - காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் ஆவேசம்
ஒரு காலத்தில் மாநில பட்டியலில் இருந்த கல்வியை இந்திரா காந்தி எமர்ஜென்சி காலத்தில் மத்திய பொது பட்டியலுக்கு கொண்டு போயிட்டார். அதை தான் இப்ப திரும்ப கேட்கிறோம்.
மாநில பட்டியலில் இருந்த கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை அடுத்து அதை ஆராய்வதற்காக 2017-ஆம் ஆண்டு பாஜக அரசு 17-பேர் கொண்ட குழுவை அமைத்தது. இதில் 3 பேர் அரசு அலுவலர்களாக இருக்க வேண்டும் என்பது விதி. மீதம் உள்ள 14 பேரில் 13 பேர் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். 13 பேரை நியமித்து விட்டார்கள் மீதம் ஒருவர் ஆள் கிடைக்காததால் இங்க விட்டுவிட்டு கனடாவில் இருந்து ஒரு உறுப்பினரை நியமிக்கிறார்கள். அவர் யார் என்றால் அகில இந்திய பிராமணர் சங்க தலைவர், யாருமே தமிழர் இல்லை, அனைவருமே பிராமணர்கள் நீங்க ஆட்சி நடத்துறீங்களா? சாதி நடத்துறீங்களா? என அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.
மேட்டூர் அணையின் நீர்வரத்து 60,771 கன அடியில் இருந்து 33,040 கன அடியாக குறைவு
மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், வினாடிக்கு 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி உள்ளன. இருப்பினும் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து காணப்பட்டது. இந்த நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 79,682 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 60,771 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 33,040 கன அடியாக குறைந்துள்ளது.
நாட்டின் 15 வது ஜனாதிபதி: 3 ஆண்டுகள் நிறைவு! திரவுபதி முர்முக்கு தமிழிசை சௌந்தர்ராஜன் வாழ்த்து
நாட்டின் 15 வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவி ஏற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.