TN DSP Transfer: தொடரும் தமிழக அரசின் அதிரடி - முக்கிய நகரங்களைச் சேர்ந்த டிஎஸ்பிக்களை மாற்றி உத்தரவு


TN DSP Transfer: தாம்பரம் டிஎஸ்பி உள்ளிட்ட 9 முக்கிய நகரைங்களைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளை மாற்றி, சட்ட-ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.


TN DSP Transfer:  தமிழ்நாட்டின் 9 முக்கிய நகரங்களைச் சேர்ந்த ஏஎஸ்பி மற்றும் டிஎஸ்பிக்களை மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது. 9 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்: அதன்படி, தாம்பரம், தாம்பரம், நாகை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, திருப்பத்தூர், மாவட்ட டிஎஸ்பிக்களை மாற்றி, சட்ட ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும், திருப்பத்தூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துமாணிக்கும் போலீஸ் அகாடெமிக்கு மாற்றம். மதுர - மேலூர், திருச்சி-முசிறி காவல் கண்காணிப்பாளர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


எந்த பதவி கொடுத்தாலும்...-- துணை முதல்வர் பதவி குறித்து சூசகமாக பேசிய உதயநிதி ஸ்டாலின்


45 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் திமுக இளைஞர் அணியினர் விழாவில் அத்துறையின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.


தமிழ்நாட்டில் 2026 ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் 100 MLA இருக்க வேண்டும் - ரூபி மனோகரன்


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கட்சியில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் - சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் பேச்சு


பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 65,000 கனஅடியாக அதிகரிப்பு;


காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 45,000 கன அடியிலிருந்து 65,000 கன அடியாக அதிகரித்து, காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.


காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 45,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 65,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஐந்தாவது நாளாக பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.


கோவை, நீலகிரியில் இன்று கனமைக்கு வாய்ப்பு


கோவை, நீலகிரியில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.


எய்ம்ஸ் மாணவர்களை தற்காலிமாக மதுரைக்கு இடமாற்றம் செய்யும் திட்டம் கைவிடல் - எம்பி மாணிக்கம் தாகூர்


ராமநாதபுரத்தில் படித்து வரும் மதுரை எய்ம்ஸ் மாணவர்களை தற்காலிமாக மதுரைக்கு இடமாற்றம் செய்யும் திட்டம் கைவிடப்பட்டிருக்கிறது - எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி


ராமநாதபுரத்தில் படித்து வரும் மதுரை எய்ம்ஸ் மாணவர்களை தற்காலிமாக மதுரைக்கு இடமாற்றம் செய்யும் திட்டம் கைவிடப்பட்டிருக்கிறது. அதனால் இப்பொழுது ராமநாதபுரத்திலே அதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டது. ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் 5-வது தளத்தில் வகுப்புகள் நடைபெறுகின்றன. மதுரை ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் இரண்டு தளங்களிலே மாணவர்களுக்கான தங்கும் வசதி செய்யப்பட்டிருக்கிறது என எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்தார். 


மயிலாடுதுறை புனித அந்தோணியார் ஆலயத்தில் திவ்ய நற்கருணை பெருவிழா கோலாகலம்


மயிலாடுதுறை புனித அந்தோணியார் ஆலயத்தில் திவ்ய நற்கருணை பெருவிழாவில் உலக அமைதிக்காக சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மயிலாடுதுறை புனித அந்தோணியார் ஆலயத்தில் நடைபெற்ற திவ்ய நற்கருணை பெருவிழாவில் உலக அமைதிக்காக ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.