Tamilnadu Day: தமிழ்நாடு பெயர்மாற்ற விழாவில் அண்ணா பேசியது என்ன தெரியுமா? வீடியோ வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்


ஜூலை 18ஆம் தேதியான இன்று தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் படிக்க..


School Leave: கொட்டித் தீர்க்கும் மழை! நீலகிரி, வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை


தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாக்களுக்கும், வால்பாறையிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


காவிரி ஆற்றில் 33 ஆயிரம் கனஅடியாக அதிகரித்த தண்ணீர் - ஒகேனக்கலில் மூன்றாவது நாளாக பரிசல் இயக்க தடை


காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 21000 கன அடியிலிருந்து, வினாடிக்கு 33,000 கன அடியாக அதிகரித்து, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 3வது நாளாக பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதிப்பு.


மின் கட்டண உயர்வு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது - கார்த்தி சிதம்பரம் அதிருப்தி


மின் கட்டண உயர்வு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மின்வாரியத்தின் கடன் சுமையை குறைத்தால் தான் மின் கட்டணத்தை குறைக்க முடியும். 25 ஆண்டுகளாக எந்த அரசும் இதை செய்யவில்லை. என்றும்,”என்கவுண்டரை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அப்படி செய்தால் கூலிப்படைக்கும் காவல் துறைக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்” என்றும் கார்த்தி எம்.பி  சிதம்பரம் தெரிவித்துள்ளார். 


Thoothukudi-Mettupalayam Train: தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரயில் - 


இந்த புதிய ரயிலின் வழக்கமான சேவை ஜூலை 20 முதல் தூத்துக்குடியில் இருந்து துவங்குகிறது.


நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை வழக்கு- முக்கிய நபர்கள் கைது


நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தந்தை, மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.


இந்நிலையில், இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மகாலிங்கம், அழகு விஜய் (தந்தை, மகன்) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் தல்லாகுளம் காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகிறார்கள். மேலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட பரத், நாக இருள்வேல், கோகுலகண்ணன் மற்றும் பென்னி ஆகிய 4 பேரை காவல்துறையினர் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் 4 பேரும் செல்லூர் ரயில் மேம்பாலத்திலிருந்து நடந்து சென்றதை அறிந்த காவல்துறையினர் பிடிக்க முயற்சித்து உள்ளனர். அப்போது பரத், கோகுலகண்ணன் மற்றும் பென்னி ஆகிய 3 பேரும் ரயில் மேம்பாலத்தில் இருந்து குதித்தபோது 3 பேருக்கும் கால் முறிவு ஏற்பட்டது. மூவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.


தமிழகத்தில் கூலிப்படை கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் - மருத்துவர் ராமதாஸ்


அனுமதி இல்லாத இடத்தில் மது அருந்துபவர்கள் மீது ஒரு ஆண்டு சிறை தண்டனையும் ஐம்பாதியிரம் அபராதம் விதிக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


திருச்சியில் பரபரப்பு.. தொழிலதிபரை கடத்தி 16 லட்சம் கொள்ளை, மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு


ரியல் எஸ்டேட் தொழிலில் இடத்தை விற்பது போன்று பட்டப் பகலில் தொழில் அதிபரை கடத்தி காட்டுப் பகுதியில் வைத்து துன்புறுத்தி 16 லட்சத்தை திருடிய கும்பல் - நடவடிக்கை எடுக்க கோரி காவல்நிலையத்தில் புகார்.