விழுப்புரம் : காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அணையை நிர்வகிக்கும் பொறுப்பு வழங்க வேண்டும் அப்போது தான் காவிரி நீரில் நிரந்தர தீர்வு காணமுடியும் என்றும் இது தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டுமென பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 


 


திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்... காவிரியில் போதுமான அளவு நீர் திறந்து விடாததால் போதுமான அளவு குறுவை சாகுபடி செய்யவில்லை 5 லட்சம் ஏக்கர் விவசாயம் செய்யக்கூடிய நிலையில் ஒரு லட்சம் ஏக்கர் விவசாய ஏக்கர் மட்டுமே விவசாயம் செய்யப்பட்டுள்ளதாகவும், தண்ணீர் திறந்துவிடாத கர்நாடகா அரசுக்கு கண்டனத்தை தெரிவிப்பதாக கூறினார். காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அணையை நிர்வகிக்கும் பொறுப்பு வழங்க வேண்டும் அப்போது தான் நிரந்தர தீர்வு காணமுடியும் என்றும் இது தொடர்பாக தமிழக அரசு வழக்கு தொடர வேண்டுமென வலியுறுத்தினார்.


ஓ பி சி ஒதுக்கீட்டில் ரோகினி ஆனையம் பரிந்துரையை செயல்படுத்துவது குறித்து முடிவு எடுக்கபடாதது வேதனை அளிப்பதாகவும், 27 விழுக்காடு இடஒதுக்கீட்டில் 150 சாதியினர் மற்றும் அனுபவிப்பதாகவும், 994 சாதியினருக்கு 2.64 விழுக்காடு இடஒதுக்கீடு மட்டுமே கிடைப்பதால் ரோகினி ஆணைய பரிந்துரையை தாமதபடுத்தாமல் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். 


தமிழகத்தில் 4889 மதுகடைகள் செயல்பட்டு வருகிற நிலையில் இந்த கடைகளின் கீழ் 4 அல்லது 5 சந்து கடைகள் இயங்கி வருவதாகவும், சந்து கடைகள் மூலமாக மது விற்பனை செய்பவர்கள் மீது 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். 


அனுமதி இல்லாத இடத்தில் மது அருந்துபவர்கள் மீது ஒரு ஆண்டு சிறை தண்டனையும் ஐம்பாதியிரம் அபராதம் விதிக்க வேண்டும் தமிழகத்தில் 500 மது கடைகள் மூடப்படும் என்று 2023 ஆம் ஆண்டு அரசானை வெளியிட்டு மூடப்பட்டது. அடுத்த 500 மதுக்கடைகள் எப்போது மூடப்படும் என்ற அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட வேண்டும் என கூறினார்.


சட்ட ஒழுங்கு சீர்கேட்டினால் பல கொலைகள் தமிழகத்தில் நடைபெற்றுள்ளது கூலிப்படை கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும், காவல் அதிகாரிகளை மாற்றுவதன் மூலம் மட்டுமே சட்ட ஒழுங்கினை பாதுகாக்க முடியாது என்றும் துணைவேந்தர் இல்லாத 4 பல்கலைகழங்களில் பணிகள் முடங்கி உள்ளதால், அரசு மோதலுக்கு ஆளுநர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனவும் 


தமிழக அரசும் ஆளுநரும் மோதலை கைவிட்டு துணைநேந்தரை நியமிக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். 


காய்கறி விலைக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையை நிர்ணயிக்க வேண்டும் அனைத்து வட்டங்களிலும் குளிர்சாதன கிடங்கு அமைக்க வேண்டும், தமிழகத்தில் உள்ளவர்களுக்கு தமிழக அரசு வேலை வாய்பில் முன்னுரிமை வழங்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், 


நீட் தேர்வு ஒட்டுமொத்தமாக ஒழிக்க பட வேண்டும் பாமகவின் நிலைப்பாடு நீட் தேர்வு குறித்து ஒவ்வொருவருக்கும் கருத்து உள்ளது அண்ணாமலை நீட் தேர்வு வேண்டும் என்று கூறுவது அவரது கருத்து என மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.