அமெரிக்காவில் நோக்கியா உள்ளிட்ட பல நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்து- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்


அமெரிக்க முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நிறுவனங்களுடன்   புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக, தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.நோக்கியா, பே பால் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் தற்போது ஆற்றிய உரையில் தெரிவித்ததாவது “ தெற்காசியாவிலேயே முதலீடுகளை ஈர்க்க உகந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களில் சுமார் 20 சதவிகிதம் தமிழ்நாட்டில் உள்ளது. வளர்ச்சி மிகுந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.” என்று தெரிவித்தார்.


ஃபார்முலா கார் பந்தயம்: இன்று முதல் போக்குவரத்தில் மாற்றம்: சென்னையில் வழியை தெரிஞ்சிக்கோங்க!


சென்னையில் 30.08.2024 முதல் 01.09.2024 வரை மதியம் 12.00 மணி முதல் 22:00 மணி வரை  ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற இருப்பதால்  போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போர் நினைவிடம் நோக்கி செல்லும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை அருகே திருப்பி விடப்பட்டு வாலாஜா சாலை , அண்ணாசாலை , பெரியார் சிலை. சென்ட்ரல் லைட் பாயின்ட் (மத்திய ரயில் நிலையம்). ஈவிஆர் சாலை வழியாக சென்றடையலாம்.வாலாஜா பாயிண்ட் நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலையில் சென்ட்ரல் லைட் பாயின்ட் நோக்கி திருப்பி விடப்படும். சிவானந்த சாலை மற்றும் கொடி மரச் சாலை முற்றிலும் மூடப்படும்.


தென்தமிழகத்தில் அமைகிறது NDRF பிராந்திய மையம்.! விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!


தேசிய பேரிடர் மீட்பு படை 16 பட்டாலியன்களுடன் செயல்பட்டு வருகிறது. இந்திய துணை ராணுவப்படை அதிகாரிகளால் நிர்வகிக்கப்படும் தேசிய பேரிடர் மீட்பு படையின் நான்காவது பட்டாலியன் தமிழகத்தின் வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் அமைந்துள்ளது. தென் தமிழகத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் பிராந்திய மையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது.விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆவணி 7ம் திருவிழா - சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி 7ம்திருவிழா இன்று காலையில் சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாலையில் சிகப்பு சாத்தி கோலத்துடன் வீதியுலா நடக்கிறது.24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களிலும், சப்பரத்திலும் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வருகிறது.


படிங்க படிங்க படிச்சுக்கிட்டே இருங்க .... 2,000 மாணவர்கள் நூலக உறுப்பினர்களாக சேர்ப்பு


தர்மபுரி மாவட்டத்தில், வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க 2 ஆயிரம் பள்ளி மாணவ, மாணவிகள் நூலகங்களில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் 5 புதிய நூலகங்கள் அமைக்க இடங்கள் தேர்வு பணி மும்முரமாக நடந்து வருகிறது.


அண்ணாமலை பறந்ததும் ஹெச்.ராஜாவுக்கு பொறுப்பு வழங்கிய பாஜக மேலிடம்! திட்டம் இதுதான்!


தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளிநாடு சென்றுள்ள நிலையில், கட்சி பணிகளை ஒருங்கிணைக்க பாஜக மூத்த தலைவர் H. ராஜா தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.


 ஜவஹர் நவோதயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை; விண்ணப்பிப்பது எப்படி?


ஜேஎன்வி என்று அழைக்கப்படும் ஜவஹர் நவோதயா பள்ளிகளில் 6ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. பெற்றோர்கள் https://navodaya.gov.in/nvs/en/Home1 -என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும்.


வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்த பகுதி..!எங்கெல்லாம் கனமழை வெளுக்க போகுது தெரியுமா?


வங்க கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது, அடுத்த 36 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நெல்லை, நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தென்காசி, குமரி ஆகிய 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


சுருளியாறு மின் நிலையத்தில் உற்பத்தியை அதிகரிக்க ஆய்வு ! 35 மெகாவாட்டை 42 ஆக உயர்த்த நடவடிக்கை


தேனி மாவட்டம் மேகமலை பகுதியில் வன உயிரினங்கள் அதிகம் நடமாட்டம் உள்ள வண்ணாத்திபாறை அருகே அடர்ந்த வனப்பகுதிக்குள் சுருளியாறு மின் நிலையம் உள்ளது. மேகமலையில் ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, அணைகளில் சேரும் தண்ணீரை இரவங்கலாறு அணைக்கு கொண்டு வந்து, அங்கிருந்து 2900 மீட்டர் நீள குழாய் மூலம் தண்ணீரை இறக்கி 141 கனஅடி நீரில் 35 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படும். 971 மீட்டர் உயரத்திலிருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. எனவே சுருளியாறு மின் நிலையத்தில் உற்பத்தி திறன் 35 மெகாவாட் என்பதை 42 மெகாவாட்டாக உயர்த்த நீண்ட காலமாக திட்டம் இருந்தது. தற்போது வாரிய அதிகாரிகள் அதற்கான ஆய்வை துவக்கி உள்ளனர்.