தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஜி.கே.மூப்பனாரின் 23 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்திருந்த நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கி உரையாற்றினார்.
அப்போது பேசிய தமிழிசை ;
இங்கே விடியல் விடியல் என்கிறார்கள். ஆனால் விடியல் அமெரிக்காவிற்கு சென்றிருக்கிறார்கள். அங்கேயும் விடியவில்லை விடியல் எங்கேயும் திரும்பமா என்றும் தெரியவில்லை என நகைச்சுவையாக பேசிய தமிழிசை, மத்தியில் நாங்கள் தான் ஆட்சியில் இருக்கிறோம் ஆனால் மாநிலத்தை பிடிப்பது என்பது தான் இங்கு இருக்கக் கூடிய அனைத்து தலைவர்களின் எண்ணமாக இருக்கிறது.
இன்றைக்கு இருக்கக் கூடிய அரசியல் தொல்லைகளுக்கு மத்தியில் நாகரிகமான அரசியலை முன்னெடுத்தவர் மூப்பனார் அவர்கள். தென்னிந்தியாவில் உள்ள நம் தமிழர் தமிழ்நாட்டுக்காரர் ஐயா மூப்பனார் அவர்கள் தான் எந்த மாநிலத்தில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் சென்று அதை தீர்த்து வைப்பார்கள். தமிழகத்தில் எவ்வளவு பெரிய தலைவர்களை நாம் பெற்று இருந்தோம் ஆனால் அதே அய்யா மூப்பனார் அவர்களுக்கு இந்த நாட்டின் குடியரசு தலைவராக வருவதற்கு கூட வாய்ப்பு இருந்தது, பிரதமராக வருவதற்கு கூட வாய்ப்பு இருந்தது ஆனால் அதை சாதிக்க விடாமல் செய்தவர்களும் தமிழகத்தில் தான் உள்ளார்கள் என்பதை நான் நினைவுப்படுத்த விரும்புகிறேன் என பேசினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் ;
மூப்பனாரின் ஒவ்வொரு நினைவு தினத்தையும் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவாக ஜி.கே.வாசன் மாற்றிவிடுகிறார். அவரை பாராட்டுகிறேன்.
முதலமைச்சர் முதலீடுகளை ஈர்த்து வந்தால் நல்லதுதான். ஆனால், இதற்கு அடித்தளம் போட்டவர் பிரதமர் மோடி. உலக நாடுகளுக்கெல்லாம் சென்று உலக நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யும் சூழலை ஏற்படுத்திக் கொடுத்தவர் பிரதமர் மோடி வலிமையானவர் இந்தியாவை ஆள்கிறார் என்பதால்தான் அயல் நாட்டினர் முதலீடு செய்கின்றனர். அவர்கள் இன்றைக்கு ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் அனைத்துமே ஏற்கனவே தமிழ்நாட்டில் இருக்கும் நிறுவனங்கள் தான் தமிழக மக்களை ஏமாற்றாமல் சுற்றுலா சென்றுள்ளீர்களா? மூதலீடு ஈர்க்கவா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்
புதிய கல்விக் கொள்கை மிகவும் ஆபத்தானது என சபாநாயகர் அப்பாவு கூறியது தொடர்பான கேள்விக்கு
சமக்ரா சிக்ஷா திட்டம் ஏற்கனவே இருக்கும் கல்வி திட்டத்திற்கு கூடுதலாக இருக்கும் திட்டம். அந்த திட்டத்தையே பின்பற்றாமல் அதற்காக ஒதுக்கப்படும் செலவை மட்டும் கேட்கிறீர்கள். வேண்டும் என்றே அரசியல் காரணத்திற்காக புதிய கல்விக்கொள்கையை மறுக்கிறார்கள். தமிழ்நாடு, இந்தியா, உலகம் என எங்கு சென்றாலும் மாணவர்கள் அங்கீகாரம் பெற வேண்டும் என்றால் புதிய கல்விக் கொள்கை தேவை என்றார்.