ட்ரோன் கேமராக்கள் கொண்டு சிறுத்தை பதுங்கி இருந்ததாக கண்டறியப்பட்ட பகுதி முழுவதும் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் சிறுத்தை பதுங்கி இருந்த பகுதி முழுவதும் புதர் மண்டி கிடப்பதால் ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு அதை அகற்றும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பகுதியில் இருந்து இருந்த சிறுத்தையானது இடம்பெயர்ந்து வனப்பகுதிக்குள் சென்று இருக்கலாம் என வனத்துறையினர் யூகிக்கின்றனர் எனினும் தொடர்ந்து இந்த பகுதி முழுவதும் தீவிரமான கண்காணிப்பில் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.


HBD Vijayakanth: கேப்டன் இல்லாத முதல் பிறந்தநாள்! இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்!


HBD Vijayakanth: தமிழ் சினிமாவின் கேப்டன் என்றும், தமிழக சட்டமன்றத்தின் முன்னாள் எதிர்ககட்சித் தலைவருமான விஜயகாந்தின் பிறந்தநாள் இன்று ஆகும்.


HBD Vijayakanth: தமிழ் திரையுலகம் ஆயிரக்கணக்கான நடிகர்களை தந்திருந்தாலும் நம் இல்லத்திலும், உள்ளத்திலும் காலத்திற்கும் குடி கொண்ட கலைஞர்கள் வெகு சிலரே ஆவார்கள். அவர்களின் எப்போதும் தவிர்க்க முடியாத இடம் பிடித்துள்ளவர் விஜயகாந்த். கொடை வள்ளல், கருப்பு எம்.ஜி.ஆர் என்றும் கேப்டன் என்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் விஜயகாந்த். கடந்தாண்டு நம்மிடம் இருந்து பிரிந்து சென்ற கேப்டனுக்கு இன்று பிறந்தநாள் ஆகும். கேப்டன் விஜயகாந்த் இல்லாமல் அவரது தொண்டர்களும், ரசிகர்களும் கொண்டாடும் முதல் பிறந்தநாள் இதுவாகும்.


Mulla Periyar Dam: கேரள எம்.பி.க்கள், யூ- ட்யூபர்கள் கண்டித்து தேனியில் விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரதம்.


முல்லைப்பெரியாறு அணை குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பி வரும் கேரள மாநில எம்.பி.க்கள், யூடியூபர்கள் உள்ளிட்டோரை கண்டித்து தேனியில் விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரதம். தொடர்ந்து முல்லைப்பெரியாறு அணை குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பி வந்தால் தமிழகத்தில் உள்ள கேரள  எல்லைகளை அடைத்து அம்மாநிலத்திற்கு பொருளாதார நெருக்கடி கொடுக்கப் போவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.


TNCMFP:ரூ.65,000 உதவித்தொகை; முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டம்;விண்ணப்பிக்க நாளையே கடைசி!


TNCMFP: தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் கீழ் ’தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டம்' 2024-26 ஆண்டுக்கு விண்ணப்பிக்கலாம்.


Tamil Nadu Chief Minister’s Fellowship Programme 2024-2026: தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள  ’தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தின்’  25 வல்லுநர்களைத் தேர்ந்தெடுக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு நாளை (26.08.2024) கடைசி நாள்.