சந்தோஷமா, கெத்தா... கொடி அறிமுக விழாவில் ட்விஸ்ட் வைத்த தவெக தலைவர் விஜய்


பனையூர் அலுவலகத்தில் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார் விஜய். சிவப்பு, மஞ்சள் பின்னணியில் இரண்டு போர் யானைகள் கொண்டும் நடுவில் வாகைமலர் கொண்ட லோகோவை கொண்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பேசுகையில்,”இந்த கொடிக்கான விளக்கத்தை கண்டிப்பாக சொல்வேன். புயலுக்கு பின் அமைதி என்பது போல, இந்த கொடிக்கு பின்னும் ஒரு வரலாறு இருக்கிறது. அதுவரைக்கும் சந்தோஷமா கெத்தா கொண்டாடுவோம். இது வெறும் கட்சிக்கான கொடி அல்ல. தமிழ்நாட்டின் வெற்றிக்கான கொடியாக பார்க்கிறேன். இதுவரைக்கும் நமக்காக உழைத்தோம். இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டுக்காகவும் உழைப்போம். இது உங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் நான் சொல்லாமலே கொண்டாடுவீங்கன்னு எனக்கு தெரியும். அனைவரையும் மீண்டும் சந்திக்கிறேன். வெற்றி நிச்சயம். நம்பிக்கையுடன் இருங்கள்” எனத் தெரிவித்துள்ளார். 


த.வெ.க கொடி, பாடலை வெளியிட்டார் விஜய்: எப்படி இருக்கு? அர்த்தம் என்ன தெரியுமா?


வாகைப்பூ , இரட்டை யானைகள் சிவப்பு மஞ்சள் மற்றும் சிவப்பு நிற வண்ணகட்சியின் கொடி மற்றும் பாடலை வெளியிட்டார் தமிழக வெற்றி கழக தலைவர். கொடியில் வாகைப்பூ , இரட்டை யானைகள் சிவப்பு மஞ்சள் மற்றும் சிவப்பு நிற வண்ணத்தில், 28 நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளன. 23 நட்சத்திரங்கள் பச்சை நிறமாகவும், ஐந்து நட்சத்திரங்கள் நீல நிறத்திலும் இடம் பெற்றுள்ளன.


த.வெ.க கொடியை  அறிமுகம் செய்து வைத்தார் த.வெ.க தலைவர் விஜய் கொடிக்கான அர்த்தத்தை கட்சியின் மாநாட்டில் கூறுகிறேன் என விஜய் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 


TNPSC Answer Key: போட்டித் தேர்வு இறுதி விடைக் குறிப்புகளை வெளியிடுவதில்லையா? டிஎன்பிஎஸ்சி விளக்கம்


டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான இறுதி விடைக் குறிப்புகள் பெரும்பாலும் வெளியிடப்படுவதில்லை என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்துத் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், இதுகுறித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிஎன்பிஎஸ்சி, . 2023ஆம் ஆண்டு வெளியிட்ட அறிவிக்கையின்படி, 11 வகையான தேர்வுகளுக்கு ஆட்சேர்ப்பு நடந்து முடிந்துள்ளது. இதில் 10 கொள்குறி வகை தேர்வுகளுக்கு இறுதி விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டு விட்டன. இது ஒப்பீட்டளவில், 91 சதவீதம் ஆகும். இவை அனைத்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.


“அமைச்சரவையில் மாற்றமா?” முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்னது இதுதான்..!


தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யும் அறிவிப்பு இன்று வெளியாகும் என தகவல் வெளியான நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினே இந்த தகவலுக்கு பதிலளித்து உள்ளார்.அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவிருப்பதாகவும் அதற்கான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று தகவல் வந்துள்ளதே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் “அப்படியான தகவல் ஏதும் எனக்கே வரவில்லை” என குறிப்பிட்டுள்ளார். 


இதனால், இன்றைக்கு அமைச்சரவை மாற்ற அறிவிப்பு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் சூசகமாக தெரிவித்துள்ளார் என்றுதான் அவரது பேட்டியின் வாயிலாக புரிந்துக்கொள்ள வேண்டிய கருத்தாக இருக்கிறது.


த.வெ.க. கொடியை அறிமுகம் செய்த விஜய்! வாழ்த்து தெரிவித்த ஜி.கே.வாசன்


தனது கட்சி கொடியை அறிமுகப்படுத்தும் நடிகர் விஜய்க்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.க்கள் பணி இயக்கப் பணி இதன் அடிப்படையில் மக்களுடைய நம்பிக்கையை பெற வேண்டும்.


மக்கள் குரலே மகேசன் குரல் என்று கூறுவோம் அந்த வகையிலே மக்களுடைய நம்பிக்கைக்கு ஏற்றவாறு செயல்படுபவர்களுக்கு வாக்கு உண்டு என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது என்று அவர் தெரிவித்தார். 


சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை 12 நாட்களில் இவ்வளவா?


தமிழ்நாட்டில் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவில் திகழ்ந்து வருகிறது. பக்தர்கள் செலுத்திய் காணிக்கைகள் கடந்த 12 நாட்களில் கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணியதில் 93 லட்சத்து, 57 ஆயிரத்து, 414 ரூபாய் ரொக்கமும், 1 கிலோ 990 கிராம் தங்கமும், 3 கிலோ 475 கிராம் வெள்ளியும், 217 அயல்நாட்டு நோட்டுகளும், 1011 அயல்நாட்டு நாணயங்களும் கிடைக்கப் பெற்றது.


மேட்டூர் அணையின் நீர்வரத்து 8,563 கன அடியில் இருந்து 7,463 கன அடியாக குறைவு


கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 12,500 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 8,563 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 7,463 கன அடியாக குறைந்துள்ளது.