கலைஞர் நினைவு நாணய விழா!
தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. இவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கருணாநிதி நினைவு 100 ரூபாய் நாணயம் இன்று வெளியிடப்படுகிறது. இதற்கான விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. கலைஞர் நினைவு நாணயம் வெளியீட்டிற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்
பெண் மருத்துவர் கொலை.. தேனி மருத்துவர்கள் போராட்டம்..
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவின் கட்டிடக் கதவை இழுத்துப்பூட்டி பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் ஒரு மணி நேர புற நோயாளிகள் பிரிவு புறக்கணிப்பால் நோயாளிகள் அவதியடைந்தனர்.
பிரதமரின் வாழத்துக்கு தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நன்றி கூறியுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா வெற்றியடைய வாழ்த்துகளும், ஆதரவும் கூறிய பிரதமருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்” என்று பதிவிட்டுள்ளார்.
காவல்நிலையத்தில் புகுந்து காவல் ஆய்வாளர் மீது தாக்குதல் - மயிலாடுதுறையில் பரபரப்பு..
போக்குவரத்திற்கு இடையூராக நின்றதாககூறி கல்லூரி மாணவரின் செல்போனை பிடிங்கி சென்ற காவல் ஆய்வாளரை காவல் நிலையத்தில் வைத்து அடித்துள்ள சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Mettur Dam : மேட்டூர் அணையின் நீர்வரத்து 22,000 கன அடியில் இருந்து 16,500 கன அடியாக குறைவு..
மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 16,500 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.
கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அன்புள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி, காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 16,500 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 22,000 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 16,500 கன அடியாக குறைந்துள்ளது.