மருத்துவர்கள் போராட்டம்:


நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் குதித்த மருத்துவர்கள்! கொல்கத்தா பெண் மருத்துவர் விவகாரம் காரணமாக நாடு முழுவதும் இன்று மருத்துவர்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இந்திய மருத்துவ சங்கம் விடுத்த வேலை நிறுத்தத்திற்கு மற்ற மருத்துவ சங்கமும் ஆதரவு அளித்துள்ளன. நாட்டிலே மிகப்பெரிய மருத்துவ சங்கமான இந்திய மருத்துவ சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதால் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ சங்கங்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்:


திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் தெரிவித்ததாவது, 1972-இல் தலைவர் கலைஞர் செயல்படுத்திட முனைந்த  அத்திக்கடவு அவிநாசி திட்டம், பல்வேறு ஆட்சி மாற்றங்களால் தடைப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி அந்தப் பகுதி மக்கள் கடந்த 2016-ஆம் ஆண்டு காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தபோது, அவர்களை நேரில் சந்தித்து, கழக ஆட்சியில் இந்தத் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தேன். திட்டத்துக்கான பணிகள் 2019-இல் தொடங்கப்பட்டிருந்தாலும், நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகுதான், இத்திட்டத்தை நிறைவேற்றிட உறுதிபூண்டு, 1,916.41 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருத்திய நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுப் பணிகள் விரைவு படுத்தப்பட்டன. ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வுக்கு வளம் சேர்க்கும் இந்தத் திட்டத்தை இன்று தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன்!


TN Rains: இரண்டரை மாசத்துல இவ்வளவா? தமிழ்நாட்டில் பொளந்து கட்டிய தென்மேற்கு பருவமழை


தமிழ்நாட்டில் கடந்த இரண்டரை மாதத்தில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட 88 சதவீதம் அதிகளவு பெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


TNPSC Group 2, 2A Exam: குரூப் 2, 2ஏ தேர்வு தேதி மாற்றமா?- தேர்வர்கள் குழப்பம்;


டிஎன்பிஎஸ்சி விளக்கம் TNPSC Group 2, 2A exam date: அண்மையில் டிஎன்பிஎஸ்சி சார்பில் வெளியான ஆண்டு அட்டவணையில், செப்டம்பர் 28ஆம் தேதி குரூப் 2 தேர்வு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.


இந்த நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, செப்டம்பர் 14ஆம் தேதி குரூப் 2 தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.


மேட்டூர் அணையின் நீர்வரத்து 16,500 கன அடியில் இருந்து 22,000 கன அடியாக அதிகரிப்பு.


மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 22,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.


கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அன்புள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி, காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 16,500 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 16,500 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 22,000 கன அடியாக அதிகரித்துள்ளது.