- சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக நிர்வாகிகளை நேரில் சந்திக்கிறார் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின். மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில், 'ஒன் டூ ஒன் பேசுவோம்' எனக் கூறியிருந்தார்.
- கன்னியாகுமரி: கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை, கண்ணாடி கூண்டு பாலம் ஆகியவற்றிற்கான படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது
- சென்னை ராமாபுரம் அருகே மெட்ரோ ரயில் கட்டுமான பணியில் விபத்து! கீழே விழுந்த ராட்சத தூண்கள் - ஒருவர் பலி
- தாய்லாந்து நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.3.8 கோடி மதிப்புடைய 2.8 கிலோ உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா போதை பொருள், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்! கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது.
- தஞ்சையில் 100 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாக கொண்டாடப்படும் முத்துப் பல்லக்கு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
- சென்னையின் பல பகுதிகளில் நேற்றிரவு விட்டு விட்டு கனமழை பெய்தது
- சென்னை ராமாவரத்தில் மெட்ரோ ரயில் கட்டுமான விபத்து ஏற்பட்ட இடத்தில் தூண்கள் அகற்றப்பட்டு, புதிய சாலை போடப்பட்டது.
- அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்துக்குள்ளான இடத்துக்கு சென்று பார்வையிட்டார் பிரதமர் மோடி!
- ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,560 உயர்ந்து சவரன் 74,360-க்கு விற்கப்படுகிறது
- குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை
- தென்காசி முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமை: உயிரிழப்பு 4 ஆக உயர்ந்தது
- இன்று 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் - வானிலை மையம் எச்சரிக்கை!
- அகமதாபாத் விமான விபத்து- கல்வி விருது வழங்கும் விழாவில் தவெக தலைவர் விஜய் அஞ்சலி
Tamilnadu Roundup: விமான விபத்து.. விஜய் இரங்கல்.. இல்லத்தரசிகளுக்கு தங்கம் கொடுத்த ஷாக் - 10 மணி செய்திகள்
ஜேம்ஸ் | 13 Jun 2025 10:09 AM (IST)
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
தலைப்புச் செய்திகள்
Published at: 13 Jun 2025 10:09 AM (IST)