உலகம் முழுவதும் பொழுதுபோக்கு பூங்கா என்பது மக்களின், முக்கிய தேர்வாக இருக்கிறது. குழந்தைகளுடன் பொழுதுபோக்கு பூங்காவிற்கு சென்று, வருவதும் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை புறநகர் பகுதியில், பல்வேறு பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன. கோடைகாலம் மற்றும் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கானோர் பொழுதுபோக்கு பூங்காவிற்கு தினமும் படையெடுத்து வருகின்றனர். வெளிநாடுகளில் பொழுதுபோக்கு பூங்கா கலாச்சாரம் தற்போது இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது.
வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா (Wonderla Amusement Park)
இதற்கு மக்களிடம் இருக்கும் பெரும் ஆதரவு, பல கோடி ரூபாயை முதலீடு செய்ய நிறுவனங்களை தூண்டுகிறது. அந்த வகையில், இந்தியாவில் முன்னணி தீம் பார்க் நிறுவனமாக, வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் ஹைதராபாத், கொச்சி, பெங்களூர் மற்றும் புவனேஸ்வர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் வொண்டர்லா தீம் பார்க் செயல்படவில்லை என்றாலும், பெங்களூருக்கு தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான மக்கள் படையெடுக்கின்றனர்.
சென்னை வொண்டர்லா எங்கு அமைகிறது ? Chennai Wonderla Theme Park Location
வொண்டர்லா நிறுவனம் தமிழ்நாட்டில் தனது முதல் பொழுதுபோக்கு பூங்காவை அமைக்க உள்ளது. சென்னை புறநகர் பகுதியில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட, பழைய மகாபலிபுரம் சாலையில், திருப்போரூர் அடுத்த இள்ளளூரில் என்ற பகுதியில் 65 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக, பொழுதுபோக்கு பூங்கா அமைய உள்ளது. சுமார் 510 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் மிகப்பெரிய ரோலர் கோஸ்டர் - India largest Roller Coaster
வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவில் உலகப் புகழ்பெற்ற Bolliger & Mabillard எனும் கோஸ்டர் அமைய உள்ளது. இதற்கான அனுமதி கொடுக்கப்பட்டு, அனைத்துவித பணிகளும் முடிவடைந்துள்ளன. இந்த ரோலர் கோஸ்டர் இந்தியாவில் மிகப்பெரிய ரோலர் கோஸ்டராக இருக்கப் போவது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே லண்டன் மற்றும் நியூயார்க் போன்ற நகரங்களில் இருப்பதை போன்று, ரோலர் கோஸ்டர் சென்னையிலும் அமைய உள்ளது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது. இந்த ரோலர் கோஸ்டர் அமைப்பதற்கு மட்டும் 80 கோடி ரூபாய் வரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மோனோரயில் (Monorail)
மோனோ ரயில்கள் பார்வையாளர்களைப் பூங்காவைச் சுற்றி அழைத்துச் செல்லவும், பல்வேறு இடங்களை மேலே இருந்து பார்க்கவும் பயன்படுத்தப்படுகின்றன. இது ஒரு பொழுதுபோக்கு சவாரியாகவும் இருக்கும். குறிப்பாக இந்த மோனோரயில், வேகமாகவும் ஒரு சில இடங்களில் மெதுவாகவும் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுவித அனுபவத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹைதராபாத்தில் உள்ள என்டிஆர் கார்டன்ஸ் (NTR Gardens) உள்ளிட்ட ஒரு சில பொழுதுபோக்கு பூங்காவில் மட்டுமே இந்த, மோனோரயில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயின்ட் வீல் ( giant wheel )
சென்னை வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவில் அமைய உள்ள, ஜெயின்ட் வீல் மிகவும் சிறப்பம்சம் பொருந்தியதாக உள்ளது. 35 மீட்டர் உயரமாகவும், அதே போன்று பிளாட்பார்மில் இருந்து 45 மீட்டர் உயரமாகவும் இந்த ஜெயின்ட் வீல் அமைய உள்ளது. கிட்டத்தட்ட இதன் மீது இருந்து ஓஎம்ஆர் அழகை ரசிக்கும் முடியும். சாகச விரும்புதிகளுக்கும் இளைஞர்களுக்கும் மிகவும் பிடித்த ஒன்றாக இது இருக்கப் போகிறது.
வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா திறப்பு விழா எப்போது? Chennai Wonderla Theme Park Opening Date
தொடர் விடுமுறை நாட்களின்போது, வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவை செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கையில் இறங்கியுள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி திறப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.