- இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேரை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” - வெளியுறவு அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
- வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை
- தேவர் ஜெயந்தி விழா - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை செல்கிறார்
- தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு
- தவெக மாநாட்டிற்குச் சென்று விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு. பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு.
- ஃபாசிசத்தை எதிர்ப்பவர்களை நய்யாண்டி செய்யும் வகையில் விஜய் பேசியது கண்டிக்கத்தக்கது, வேதனைக்குரியது -ஆளூர் ஷாநவாஸ்
- தூத்துக்குடி மினி டைடல் பார்க்-ல் குத்தகை பணிகள் திறப்பு விழாவிற்கு முன்பே நிறைவு - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்
- சங்கர் படம் போல் பிரம்மாண்டமாக இருந்தது தவெக மாநாடு” – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
- சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு முதல்முறையாக போனஸ் அறிவிப்பு - நான் - எக்ஸிகியூடிவ் ஊழியர்களுக்கு ரூ.15,000 வழங்கப்படும் என அறிவிப்பு
- சென்னை கொடுங்கையூரில் ஹார்டுவேர் கடையில் கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டிய 21 வயது பெண் கைது - மதுபோதையில் இருந்தது விசாரணையில் அம்பலம்
- தீபாவளியை முன்னிட்டு மதுரை வாடிப்பட்டி வார சந்தையில் சுமார் ரூ.2 கோடிக்கு விற்பனையான ஆடுகள் மற்றும் நாட்டுக்கோழிகள்
- தீபாவளி பண்டிகைக்கு இரு தினங்களே உள்ள நிலையில் ஈரோட்டில் விடிய விடிய நடைபெறும் வாராந்திர ஜவுளி சந்தை களைகட்டி உள்ளது
- ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டியது ரூ.3000 கோடி, ஒதுக்கியதோ ரூ.372 கோடி என்று அன்புமணி ராமதாஸ் சாடல்
- திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கி, கட்டாய கருக்கலைப்பு செய்த காதலனை கைது செய்ய வேண்டும் என இளம்பெண் புகார்
- 14 மாதங்களுக்குப் பிறகு சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை மீண்டும் தொடக்கம் - இரு மார்கங்களிலும் இயக்கப்படும் என அறிவிப்பு
Tamilnadu Round Up: தவெக மாநாடு.. அடங்காத விவாதம்.. மதுரை செல்லும் முதலமைச்சர்.. தமிழகத்தில் இதுவரை!
குலசேகரன் முனிரத்தினம்
Updated at:
29 Oct 2024 09:49 AM (IST)
Tamilnadu Round Up: தமிழ்நாட்டில் காலை முதல் 10 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
10 மணி தலைப்புச்செய்திகள்
NEXT
PREV
Published at:
29 Oct 2024 09:48 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -