- தமிழ்நாடு முழுவதும் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை பகிர்ந்தும் தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாடிய பொதுமக்கள்
- பட்டாசு, வாண வேடிக்கைகளால் சென்னையில் மோசமடைந்த காற்றின் தரம் - பெருங்குடி, ஆலந்தூர் மற்றும் அரும்பாக்கத்தில் காற்றின் தரம் மோசம் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல்
- வங்கக் கடலில் இந்த வாரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் - கனமழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை மையம் எச்சரிக்கை
- சென்னையில் 19 கிலோ எடைகொண்ட வணிக சிலிண்டர் விலை 61.50 ரூபாய் அதிகரித்து, ரூ.1964.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 28, 29, 30 ஆகிய 3 நாட்களில், கிளாம்பாக்கத்தில் இருந்து 5.25 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்
- தீபாவளியை ஒட்டி சிவகாசியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூலம், ரூ.6 ஆயிரம் கோடிக்கும் அதிகமான பட்டாசுகள் விற்பனை
- சென்னை எண்ணூரில் பட்டாசு தீப்பொறிபட்டு 4 குடிசை வீடுகள் எறிந்து நாசமாகின
- தொடர்மழையால் கோவை சோமையம்பாளையம் குட்டையில் மதகு அருகே உடைப்பு ஏற்பட்டு வெளியேறும் நீர் - இதே நிலை நீடித்தால் தரைபாலமும் உடையும் அபாயம் உள்ளதாக மக்கள் அச்சம்.
- கோவை வால்பாறை காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ. கிருஷ்ணவேணி சாலை விபத்தில் உயிரிழப்பு - இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவு
- தொடர் விடுமுறையை ஒட்டி, தீபாவளி பண்டிகையை கொண்டாடிய கையோடு சுற்றுலா தளங்களில் குவிந்து வரும் பொதுமக்கள்
- தேனி மாவட்டம் கம்பம் -கூடலூர் சாலையில் இரண்டு பைக்குகள் நேருகு நேர் மோதி விபத்து - 3 இளைஞர்கள் உயிரிழப்பு, 2 பேர் படுகாயம்
- தீபாவளியை ஒட்டி புதுக்கோட்டை மாநகரப்பகுதிகளில் குவிந்த சுமார் 150 டன் குப்பைகள் அகற்றம். இதில் 50 டன் அளவுக்கு பிளாஸ்டிக் குப்பைகள் என மாநகராட்சி நிர்வாகம் தகவல்
- சேலம் மாநகரின் களரம்பட்டி பகுதியில் பட்டாசு தீப்பொறி விழுந்து, பனியன் நிறுவன குடோனில் தீ விபத்து
- தீபாவளி தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் பட்டாசு விபத்துகளால் 300-க்கும் மேற்பட்டோர் காயம் என தகவல்
Tamilnadu RoundUp: தீபாவளி கோலாகலம், வங்கக்கடலில் உருவாகிறது புதிய புயல் - தமிழ்நாட்டில் இதுவரை!
குலசேகரன் முனிரத்தினம்
Updated at:
01 Nov 2024 10:16 AM (IST)
Tamilnadu Round Up: தமிழ்நாட்டில் காலை முதல் 10 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு தலைப்புச் செய்திகள்
NEXT
PREV
Published at:
01 Nov 2024 10:16 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -